அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது? தங்கம்... வெள்ளி... பங்குச்சந்தை? விரிவான அலசல்...

Gold Or Share: நீண்டகால அடிப்படையில் பார்த்தால், தங்கம் மற்றும் பங்குச்சந்தை இரண்டுமே ஏறக்குறைய ஒரே லாபத்தைக் கொடுக்கின்றன, எதில் முதலீடு செய்யலாம்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2024, 05:34 PM IST
  • அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது?
  • தங்கத்தின் மீதான முதலீடு
  • பங்குச்சந்தை நீண்டகால முதலீட்டில் நல்ல லாபம் கொடுத்துள்ளது
அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது? தங்கம்... வெள்ளி... பங்குச்சந்தை? விரிவான அலசல்... title=

தங்கம் என்பது பாரம்பரிய காரணங்களுக்காக மட்டுமல்லாமல் நல்ல பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது பங்குச்சந்தையும் நல்ல லாபத்தைக் கொடுத்து வருகிறது. பங்குச் சந்தையின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதும், மக்கள் பங்குச்சந்தையிலும், பங்குகள் அடிப்படையிலான முதலீடுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம், தங்கம் கொடுக்கும் அளவு லாபத்தை பங்குச் சந்தைகளும் கொடுக்கிறது என்பது தான்.

தங்கம் என்பது விலையுயர்ந்ததாக மாறிய நிலையில், அதை முதலீட்டிற்காக வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது. ஆனால், தங்கத்தை பொன்னாக மட்டுமே வாங்க வேண்டாம் என்றும், தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்ற வசதியும் வந்துவிட்டது. இப்படி முதலீடுகளில் பல்வேறு விதமான மாற்றங்கள் நடந்துக் கொண்டிருந்தாலும், முதலீட்டிற்கு அதிக லாபம் கொடுப்பது தங்கமா இல்லை பங்குச் சந்தையா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. 

நீண்டகால அடிப்படையில், இல்லையென்றால் கடந்த ஐந்து வருடங்களில் அதிக வருமானம் கொடுத்தது எந்த முதலீடு என்பதைத் தெரிந்துக் கொள்வோம். 

மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன..!!

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து, 10 கிராமுக்கு ரூ.74,000 என்ற நிலையை எட்டியது. அப்போது, தங்கம் எம்சிஎக்ஸில் 24 காரட் விலை ரூ.75,000 என்ற உச்சத்தைத் தொட்டுவிடும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல தங்கத்திற்கு அடுத்தபடியாக வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.  கடந்த ஐந்தாண்டுகளில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள விதம், ஆண்டு அடிப்படையில் 18% லாபத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் நிஃப்டி 15% லாபத்தை கொடுத்துள்ளது. இது, பங்குச்சந்தை வருமான தங்கத்திற்கு நிகரான சிறந்த வருமானத்தை அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை 20% உயர்வு

அண்மையில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, கடந்த சில ஆண்டுகளில் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பது முதலீட்டிற்கு ஆதாயம் கொடுப்பதாக பார்க்கப்பட்டாலும், சமீபகாலமாக நீண்ட கால அடிப்படையில் நிஃப்டி நல்ல வருமானத்தை கொடுத்துள்ளது. 

கடந்த ஏழு ஆண்டுகளின் அடிப்படையில் நிஃப்டி மற்றும் தங்கத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டின் வருமானமும் கிட்டத்தட்ட ஒன்றுபோலல்வே இருந்தது என்று தெரிய வந்துள்ளது. நிஃப்டியின் சராசரி ஆண்டு வளர்ச்சி (CAGR) 15% ஆகும். அதே நேரத்தில், தங்கத்தின் சராசரி ஆண்டு அதிகரிப்பு 14% ஆக இருந்தது. உலகளவில், இந்த ஆண்டு இதுவரை தங்கத்தின் விலை சுமார் 20% அதிகரித்துள்ளது. 

தங்கம் விலை உயர்வதற்கு காரணங்கள்
ஏப்ரல் நடுப்பகுதியில், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டினாலும், தற்போது அது சற்று குறைவாகவே உள்ளது. தங்கத்தின் விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன.

மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கியது முக்கியமான காரணம் ஆகும். சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கம் அதிகம் வாங்கிய நாடுகளின் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. உக்ரைன் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, ரஷ்ய சொத்துக்களை அமெரிக்கா முடக்கியதை அடுத்து, அமெரிக்க டாலர் மீதான உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்தது.

எனவே அமெரிக்க டாலருக்கு பதிலாக பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கின. இதனால், தங்கத்தின் விலை எதிர்பாராதவிதமாக உயர்ந்தன. அமெரிக்க டாலரின் வீழ்ச்சிக்கு மத்தியில், தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டது என்பதும், சீன முதலீட்டாளர்களின் தேவை அதிகரித்ததும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

தற்போது நீண்டகால அடிப்படையில் பார்த்தால், தங்கம் மற்றும் பங்குச்சந்தை இரண்டுமே ஏறக்குறைய ஒரே லாபத்தைக் கொடுக்கின்றன. 

மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News