ஏடிஎம் கார்ட் கையில் இல்லையா? இந்த முறைகள் மூலம் பணம் எடுக்கலாம்!
கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.
இன்றைய நாகரீக உலகில் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி கண்டிருப்பதால் நாம் இருந்த இடத்திலிருந்து கொண்டே பல முக்கியமான வேலைகளையும் செய்து முடித்திட முடியும். இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறப்பான ஒன்று ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது தான், வங்கிகளுக்கு சென்று அங்கு நீண்ட நேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டிய தேவையில்லை. கையில் ஏடிஎம் கார்டு இருந்தால் போதும் அதனை வைத்து ஏடிஎம் மையங்களில் நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இனிமேல் நீங்கள் ஏடிஎம் மையத்தில் டெபிட் கார்டை பயன்படுத்தி மட்டும் தான் பணம் எடுக்க வேண்டும் என்பதில்லை. ஏனெனில் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் முறை இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளுக்குப் பதிலாக யூபிஐ ஆப்ஸைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பதன் நன்மை என்னவென்றால், கார்டு தொலைந்து போனது, தவறான பின்களால் நிராகரிக்கப்பட்ட டிரான்ஸாக்ஷன்கள் மற்றும் ஏடிஎம் கார்டு திருட்டு போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்
கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. இந்தியா முழுவதும் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் கார்டு இல்லாமல், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது பாதுகாப்பான முறையாக கருதப்படுகிறது. ஏனெனில் இது மொபைல் பின்னைப் பயன்படுத்தி பணத்தை உருவாக்குகிறது. கார்டு இல்லாமல் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.5000 வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் சில வங்கிகள் ரூ.10,000 வரை பணத்தை பெற அனுமதிக்கிறது. குறிப்பிட்ட ஏடிஎம் மையம் யூபிஐ சேவையை வழங்கினால் தான் நீங்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும். ஜிபே, போன்பே, பிஹெச்ஐஎம் போன்ற எந்தவொரு யூபிஐ அடிப்படையிலான கட்டண பயன்பாட்டை பயன்படுத்தலாம். இப்போது ஏடிஎம் மையத்தில் டெபிட் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
1) ஏதேனும் ஏடிஎம் மையத்திற்கு சென்று, 'வித்ட்ராவ் ஆப்ஷன்' என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்..
2) ஏடிஎம் இயந்திரத்தின் திரையில், யூபிஐ ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3) ஏடிஎம் திரையில், நீங்கள் கியூஆர் குறியீட்டைப் பார்ப்பீர்கள்.
4) உங்கள் மொபைலில் ஏதேனும் யூபிஐ பேமெண்ட் ஆப்ஸைத் தொடங்கி, கியூஆர் ஸ்கேனர் குறியீட்டைச் செயல்படுத்தவும்.
5) குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, நீங்கள் திரும்பப் பெற விரும்பும் தொகையை உள்ளிட வேண்டும்.
6) பணத்தை எடுக்க, தொடரவும் என்பதைக் கிளிக் செய்து யூபிஐ பின்னை உள்ளிட வேண்டும்.
மேலும் படிக்க | Aero India 2023: 80 க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பை ஈர்த்த ஏரோ இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ