இந்திய பங்குச்சந்தையில், சமீபத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதால், பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த முறை எஸ்ஐபி எனப்படும் மாதாந்திர முதலீட்டு திட்டம். முதலீடுகளை திட்டமிட்டு செய்வதில் தான் பணத்தை பன்மடக்காக்கும் ஃபார்முலா நிறைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்ஐபியில் (Systematic Investment Plan) குறைந்தபட்சம் ரூபாய் 500 என்ற அளவில் முதலீட்டை தொடக்கலாம் என்பதால், சாமானிய மக்களும் இதில் முதலீடு செய்து, நல்ல வருமானத்தை பெறலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, அதில் கிடைக்கும் வருமானம், குறைந்தபட்சம் 12 சதவீதம் என நிபுணர்கள் கூறுகின்றனர். சில சிறந்த நிறுவனங்கள், 40% வருமானத்தை கூட கொடுக்கின்றன.


பணத்தை பன்மடங்காக்க, சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதால், ஆயிரங்களை எளிதாக கோடிகளாக்கலாம். அதோடு, நீண்ட கால தொடர் முதலீடு அவசியம் என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், நீண்ட கால தொடர் முதலீடுகளில், 40% வரை கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை கொடுத்த சில சிறந்த பரஸ்பர நிதியங்களை அறிந்து கொள்ளலாம்.


பேங்க் ஆப் இந்தியா ஸ்மால் கேப் பண்ட் (Bank of India Small Cap Fund)


பேங்க் ஆப் இந்தியாவின் ஸ்மால் கேப் பண்டுகளில் 2018 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட முதலீட்டில், 38.66% வருமானம் கிடைத்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த பரஸ்பர நிதியத்தின் மொத்த சொத்து மதிப்பு 1516.96 கோடிகளாகும்.


எடல்வைஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் (Edelweiss Small Cap Fund)


2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட எடல்வைஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் முதலீட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 34. 66 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு, ரூபாய் 4292.71 கோடிகள்.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோ


டாடா ஸ்மால் கேப் ஃபண்ட் (TATA Small Cap Fund)


கடந்த 2018 நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட டாடா ஸ்மால் கேப் ஃபண்ட் முதலீட்டிற்கு, 35.29 சதவீத வருமானம் கிடைத்துள்ளது. இதன் மொத்த சொத்து மதிப்பு 9,319.04 கோடிகள்.


மிரே அசட் மிட் கேப் ஃபண்ட் (Mirae Asset Mid Cap Fund)


நீண்டகால முதலீட்டில் சிறந்த வருமானம் கொடுக்கும் பரஸ்பர நிதியங்களில் மிரே அசட் மிட் கேப் ஃபண்ட் பலரும் விரும்பும் ஒரு முதலீடு. 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட முதலீட்டில், 27.87 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 17,787.87 கோடியாகும்.


முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ