National Pension System: என்பிஎஸ் என பிரபலமாக அறியப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பு, வயது மூப்பின் போது மக்களை நிதி ரீதியாக பாதுகாக்க அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு அரசு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு மொத்தத் தொகை கிடைக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கவும் இதில் ஏற்பாடு உள்ளது.
NPS முதலில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. இருப்பினும், பின்னர் இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் விரிவாக்கப்பட்டது. இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
NPS என்றால் என்ன?
NPS என்பது சந்தை இணைக்கப்பட்ட திட்டமாகும். அதாவது, நீங்கள் அதில் என்ன பங்களிப்பை செய்தாலும், அதன் வருமானம் சந்தைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. டயர் 1 கணக்கை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் டயர்-1 கணக்கு இருந்தால் மட்டுமே டயர்-2 கணக்கை தொடங்க முடியும். 60 வயதைத் தாண்டிய பிறகு, NPS-ல் முதலீடு செய்த மொத்தத் தொகையில் 60 சதவீதத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்தத் தொகை ஒரு வகையில் என்பிஎஸ் உறுப்பினரின் (NPS Members) ஓய்வூதிய நிதியாகும்.
குறைந்தபட்சம் 40 சதவீத தொகையை வருடாந்திரமாக (Annuity) பயன்படுத்த வேண்டும். இந்த ஆண்டுத் தொகையிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கும். என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்பது அவர்களது ஆனுவிட்டியைப் பொறுத்தது.
NPS மூலம் ரூ.50,000 -க்கு மேற்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும்
ஒரு நபர் 35 வயதில் என்.பி.எஸ்-ல் முதலீடு செய்யத் தொடங்கினால், இந்தத் திட்டத்தில் தொடர்ந்து 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும், அதாவது 25 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் அவர் முதலீடு செய்வார். ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெற, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
NPS Calculator
- NPS கால்குலேட்டரின் படி, ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாயை 25 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு 45,00,000 ரூபாயாக இருக்கும்.
- 10% வீதத்தில் இதற்கான வட்டி ரூ.1,55,68,356 ஆக இருக்கும்.
- இந்த வழியில், உங்களிடம் மொத்த தொகையாக ரூ.2,00,68,356 இருக்கும்.
- இந்தத் தொகையில் 40% -ஐ வருடாந்திரத் தொகை, அதாவது ஆனுவிட்டியாகப் பயன்படுத்தினால், ரூ.80,27,342 உங்கள் ஆண்டுத் தொகையாக இருக்கும்.
- மேலும் மொத்தத் தொகையாக ரூ.1,20,41,014 கிடைக்கும்.
- ஆனுவிட்டி தொகையில் 8% வருமானம் பெற்றால், ஒவ்வொரு மாதமும் 53,516 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ