உலகம் முழுவதும் பணவீக்கம் பல கட்டங்களைக் கடந்து புதிய சாதனைகளை படைத்துள்ளது. இது உலக மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனுடன் மற்ற பொருளாதார பிரச்சனைகளாலும் சாமானியர்களின் நிதி நிலை குளறுபடியாகி வருகிறது. இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. குடும்பம், குழந்தைகள், முதலீடுகள் என அனைத்திலும் இதன் தாக்கம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்களில் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பும் ஒரு முக்கிய விஷயமாகும். குழந்தைகளின் கல்வி குறித்து பெற்றோரின் பதற்றமும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் கல்வியுடன், பெற்றோர்கள் குடும்பத்தின் பிற தேவைகள் மற்றும் அவசரகால நிதி தேவையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான நிலையில், நெருக்கடிகள் தலைதூக்கும் முன் தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இதற்கு, பெற்றோர்கள் சரியான நேரத்தில் சரியான நிதித் திட்டமிடலைச் செய்வது மிக அவசியம்.


SIP கால்குலேட்டர்: குழந்தைப் பருவத்தில் கம்பவுண்டிங் இன்டிரஸ்டைப் பற்றி நாம் அனைவரும் படித்து அறிந்திருக்கிறோம். பெரியவர்களாகி தனிப்பட்ட நிதியை நிர்வகிக்கத் தொடங்கும் போது, ​​பவர் ஆஃப் காம்பௌண்டிங்கின் உண்மைத்தன்மை வெளிப்படும். கூட்டு சக்தியின் பலன் (பவர் ஆஃப் காம்பவுண்டிங்) நீண்ட காலத்திற்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு முதலீட்டாளர் அடுத்த 10-15-20 ஆண்டுகளுக்கு SIP -யிலிருந்து போட்ட பணத்தை எடுக்காமல் இருந்தால், அவர் கூட்டுத்தொகையின் சரியான பலனைப் பெறுவார்.


பவர் ஆஃப் காம்பௌண்டிங்கில் இரட்டை வருமானம் கிடைக்கும்


பவர் ஆஃப் காம்பௌண்டிங்கில் முதலீட்டாளர் இரட்டை வருமானத்தைப் பெறுகிறார். ஒரு வருமானம் அசல் மற்றும் மற்றொன்று வட்டி வருமானத்தில் பெறப்படுகிறது. இதில் வட்டிப் பகுதி எடுக்கப்படுவதில்லை. ஆகையால், இது கூட்டு வருமானத்தை அளிக்கும் வகையில் செயல்படுகிறது. நீங்கள் நீண்ட காலத்திற்கு உங்களுக்காக ஒரு குறிப்பிட்ட நிதியை உருவாக்க விரும்பினால், அது பவர் ஆஃப் கம்பௌண்டிங்கின்  (Power of Compounding) உதவியுடன் எளிதாகிவிடும்.


ரூ 5,000  எஸ்ஐபி மற்றும் 12% வருமானம்


ஒரு முதலீட்டாளர் பணி ஓய்வுகாலத்திற்காக திட்டமிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 SIP முதலீடு செய்கிறார். சராசரி ஆண்டு வருமானம் (CAGR) 12 சதவீதமாக இருக்கும் ஒரு ஃபண்டில் அவர் முதலீடு செய்கிறார். அவர் ஓய்வு பெறும்போது எவ்வளவு பணம் பெறுவார் என்பது ஓய்வுகால திட்டமிடல் செய்யப்பட்ட வயதைப் பொறுத்தது.


SIP இங்கு உதவியாய் இருக்கும் 


எஸ்ஐபி மூலம், சில ஆண்டுகளில் நல்ல தொகையை திரட்டி உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம். இதன் மூலம் நாளுக்கு நாள் அதிகமாகும் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களின் இறுக்கத்திலிருந்து விடுபடலாம். குழந்தை வெளிநாட்டில் படித்தாலும் சரி, அல்லது நாட்டிற்குள் படித்தாலும் சரி, விலையுயர்ந்த கட்டணங்கள் அல்லது பிற செலவுகளின் பதற்றத்திலிருந்து இதன் மூலம் பெற்றோர் நிவாரணம் பெறலாம். 


மேலும் படிக்க | LIC Saral: அசத்தலான பென்ஷன் திட்டம்... ஒருமுறை முதலீடு எக்கச்சக்க பலன்கள்!


3.25 கோடி ரூபாய் நிதி தயாராக இருக்கும்


SIP கால்குலேட்டரின் படி, முதலீட்டாளர் 25 வயதில் ஓய்வுகாலத்துக்காக திட்டமிட்டால், அவருக்கு 60 வயது ஆகும்போது, அவரிடம் ரூ.3.25 கோடி இருக்கும். அவர் 30 வயதில் ஓய்வுகாலத்துக்காக சேமிக்கத் தொடங்கினால், அவரிடம் மொத்தமாக ரூ.1.8 கோடி இருக்கும். 35 வருடங்களில் அவர் அதை ஆரம்பித்திருந்தால், அவருடைய நிதி 95 லட்சம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும். 5 ஆண்டுகள் முன்னதாக முதலீட்டைத் தொடங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்பது இந்த உதாரணம் மூலம் தெளிவாக விளங்குகிறது. பவர் ஆஃப் கம்பவுண்டிங் இருப்பதால் இது சாத்தியமாகிறது.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. இனி பாதி கட்டணம் செலுத்தினால் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ