SIP Calculator: ரூ.10,000 பரஸ்பர நிதிய முதலீட்டை... ஒரு கோடியாக பெருக்கும் ஃபார்முலா
SIP Investment Tips: பரஸ்பர நிதியங்களில் குறிப்பிட்ட அளவு பணத்தை 10-20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கோடிகளில் கார்பஸை உருவாக்கலாம்.
SIP Investment Tips: வாழ்க்கையில் சம்பாதிக்கும் பணத்தை திட்டமிட்டு சேமித்தால், நமது நிதி நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதோடு, ஓய்வு காலத்திலும் யாரையும் சாராமல் நிம்மதியாக வாழலாம். அதிலும், இளம் வயது முதலே சேமிக்க தொடங்கினால், பணத்தை பனமடங்காக்குவது எளிது. அதிலும் பரஸ்பர நிதியங்களில் குறிப்பிட்ட அளவு பணத்தை 10-20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கோடிகளில் கார்பஸை உருவாக்கலாம்.
சாமான்யர்களுக்கு ஏற்ற முதலீடாக இருக்கும் எஸ்ஐபி என்னும் பரஸ்பர நிதியம் மூலம், பணம் பன்மடங்காக பெருகும். குறைவான பணம் சம்பாதிப்பவர்களுக்கு தங்கள் பணத்தை சேர்க்க முடியாது என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், அதை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள். குறைந்த சம்பளத்தில் கூட நல்ல சேமிப்பை செய்யக் கூடிய ஒரு ஃபார்முலாவைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
நடுத்தர வர்க்கத்தினர், 50:30:20 என்ற ஃபார்முலாவைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதாகச் சேமிக்கலாம். ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உங்கள் கணக்கில் சம்பளம் வந்தவுடன், உங்கள் முழு சம்பளத்தையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கவும். சம்பளத்தில் முதல் பாகத்தை 50 சதவீதமாகவும், இரண்டாம் பாகத்தை 30 சதவீதமாகவும், மூன்றாம் பகுதியை 20 சதவீதமாகவும் பிரித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மாதச் சம்பளத்தில் 50 சதவீதத்தை அதாவது ரூ.25,000 உணவு, வீடு, கல்வி அல்லது பிற தேவையான வீட்டுச் செலவுகள் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்கு மட்டும் செலவிடுங்கள். உங்களின் அனைத்து EMI கடன் தவணைகள் அல்லது வாடகைகளையும் இதில் சேர்க்கவும். பயணம், உடைகள், ஷாப்பிங் அல்லது சிகிச்சை போன்ற செலவுகளுக்காக சம்பளத்தில் 30 சதவீதத்தை ஒதுக்கி வையுங்கள். உங்கள் சம்பளத்தில் மீதமுள்ள 20 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நபரும் தனது சம்பளத்தில் 20 சதவீதத்தை சேமிப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய் சம்பளத்தில் 20 சதவிகிதம் அதாவது 10,000 ரூபாய் எடுத்து, நீண்ட காலத்திற்கு SIP என்னும் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்யும் போது, கூட்டு வட்டியின் பயனால், அதில் கிடைக்கும் வருமானம் பன்மடங்காக பெருகுகிறது. இதனால் பல கோடி ரூபாய் நிதியை எளிதாக சேர்க்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது 12% முதல் 15% வரை ஆண்டு வருமானத்தை அளிக்கிறது. அதிலும், சில சிறந்த பரஸ்பர நிதியங்கள் 20% முதல் 30% என்ற அளவில் கூட வருமானத்தை அள்ளித் தருகின்றன.
SIP மூலம் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்த நிலையில், சராசரி ஆண்டு வருமானம் 15 சதவீதம் என்று வைத்துக் கொண்டால் கூட உங்களிடம் மொத்தம் ரூ.1,10,42,553 இருக்கும். SIPயில் பொதுவாக வாராந்திர, காலாண்டு அல்லது மாதாந்திர முதலீடு செய்யலாம்.
குறிப்பு: பரஸ்பர நிதிய முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. எனவே, முதலீட்டு முறைகள் குறித்து நிதி ஆலோசகருடன் விரிவாக ஆலோசனை செய்து அதுகுறித்து விரிவாக தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | குறைந்த சம்பளம் வாங்கினாலும் இந்த வங்கிகள் உங்களுக்கு லோன் தருகின்றன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ