SIP Mutual Fund Investment Tips: பணக்காரர் ஆக வேண்டும், கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கனவு எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒரே இரவில் யாராலும் இந்த நிலையை அடைய முடியாது. இருப்பினும், தினமும் கொஞ்சம் பணத்தை சேமித்து, சரியான திட்டமிடலுடன், சரியான இடத்தில் முதலீடு செய்தால், நீங்கள் கோடீஸ்வரன் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்


இன்றைய டிஜிட்டல் உலகில், பெரிய அளவிலான நிதியை உருவாக்குவது என்பது எளிதாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், பலர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் பணத்தை இரட்டிப்பாகவும், மூன்று மடங்காகவும் பெருக்குகிறார்கள். ஆனால் பங்குச் சந்தையின் அபாயத்தைத் தவிர்க்க விரும்பினால், பரஸ்பர நிதிகள் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் தினமும் வெறும் 100 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்து கோடீஸ்வரராகலாம்.


SIP மூலம், மிகக் குறைந்த அளவிலான முதலீட்டில், கோடீஸ்வரர் ஆகவது எப்படி, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்...


தினம் 100 ரூபாய் சேமிப்பதன் மூலம்  கோடீஸ்வரர் ஆகும் வழி


உங்கள் கோடீஸ்வர கனவை நிறைவேற்ற விரும்பினால், தினமும் 100 ரூபாய் சேமிக்கத் தொடங்குங்கள். இதற்குப் பிறகு, உங்கள் சேமிப்பை மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் SIP  முறை மூலம் முதலீடு செய்யுங்கள். மியூச்சுவல் ஃபண்டுகளில் சராசரியாக 12 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும். இருப்பினும், சில சிறந்த பரஸ்பர நிதியங்கள், 30% வரை கூட வருமானத்தை கொடுக்கின்றன. மேலும், கூட்டு வட்டியின் பலனால், பணம் எளிதில் பன்மடங்காகிறது.


மேலும் படிக்க | UPS Update: 25 ஆண்டுகளுக்கு குறைவாக சர்வீஸ் உள்ளவர்களுக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?


மியூச்சுவல் ஃபண்ட் என்னும்  SIP திட்டத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகள் முதலீடு செய்யுங்கள்


தினமும் 100 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதாவது மாதம் 3000 ரூபாய். இப்போது நீங்கள் இந்த 3000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள். இப்போது நீங்கள் தொடர்ந்து 30 வருடங்கள் அதே தொகையை  தொடர்ந்து முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் மொத்தம் 10,80,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள்.


முதலீட்டில் கிடைக்கும் வருமானம்


ஒவ்வொரு மாதமும் ரூ.3000 முதலீடு செய்து 12% வருமானம் கிடைக்கும் என வைத்துக் கொள்வோம்., 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்த முதலீடு ரூ.10,80,000 ஆக இருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும் 95,09,741 ரூபாய் வருமானத்தை சேர்த்தால்,, உங்கள் மொத்த  நிதி ரூ.1,05,89,741  என்ற அளவிற்கு வளர்ந்திருக்கும். 


மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்கள் பணத்தை பன்மடங்கு அதிகரிக்கும்


மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் பணத்தை பன்மடங்கு அதிகரிக்கலாம் மற்றும் கோடீஸ்வரராகும் உங்கள் கனவை நிறைவேற்றலாம். SIP என்பது நீண்ட காலத்திற்கு நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யக்கூடிய ஒரு சிறந்த வழி. இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை செய்ய வேண்டும். இது தொடர்பான மேலும் தகவலுக்கு, நீங்கள் நிதி ஆலோசகரை தொடர்பு கொள்ளலாம்.


மேலும் படிக்க | Budget 2025: இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை, பட்ஜெட்டில் வரப்போகும் மிகப்பெரிய அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ