SCSS Interest Rates : சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அறிவித்தது அரசு.... அதிக வட்டி கிடைக்குமா?
Small Savings Schemes Interest Rates: ஏப்ரல் 1, 2024 முதல் தொடங்கும் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாறாமல் இப்போது இருக்கும் விகிதங்களிலேயே தொடருன் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Small Savings Schemes Interest Rates Update News: ஏப்ரல்-ஜூன் 2024 காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சிறிய சேமிப்புத் திட்டங்களான பிபிஎஃப் (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தித் திட்டம் (SSY) மற்றும் பிற திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றாமல் இப்போதைய விகிதங்களிலேயே தொடர்வதாக அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1, 2024 முதல் தொடங்கும் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த சிறுசேமிப்புத் திட்டங்களின் (Small Saving Schemes) வட்டி விகிதங்கள் மாறாமல் இப்போது இருக்கும் விகிதங்களிலேயே தொடருன் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஏப்ரல் 1, 2024 முதல் தொடங்கி ஜூன் 30, 2024 வரை உள்ள 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் (Interest Rates), 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி 1, 2024 முதல் மார்ச் 31, 2024 வரை) அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களில் இருந்து மாறாமல் அப்படியே இருக்கும்." என்ரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்களின், குறிப்பாக தபால் நிலையங்களால் (Post Office) இயக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் அறிவிக்கிறது. அவ்வப்போது சில திட்டங்களுக்கான விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
மேலும் படிக்க | 7th Pay Commission: அடிப்படை சம்பளத்துடன் DA இணைக்கப்படுமா? வெளியான தகவல்!
தற்போதுள்ள வட்டி விகிதங்கள் என்ன?
- சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) என்றழைக்கப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் டெபாசிட்களுக்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தில் வட்டி அளிக்கப்படுகின்றது.
- மூன்றாண்டு கால வைப்புத்தொகைக்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கின்றது.
- பிரபலமான பிபிஎஃப் (PPF) மற்றும் சேமிப்பு வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவீதம் மற்றும் 4 சதவீதமாக உள்ளன.
- கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டத்துக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கிறது.
- ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2024 வரையிலான காலகட்டத்தில், தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதம் 7.7 சதவீதமாக இருக்கும்.
- மாதாந்திர வருமான திட்டத்தில் (Monthly Income Scheme) முதலீட்டாளர்களுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), மே 2022 முதல், பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 2.5 சதவீதம் முதல் 6.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது வங்கிகள் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களையும் உயர்த்த காரணமாக இருந்தது. இருப்பினும், இந்த நிதியாண்டு பிப்ரவரி முதல் தொடர்ந்து ஐந்து நிதிக் கொள்கைக் குழுக் கூட்டங்களில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தாமல் பழைய விகிதங்களிலேயே தொடர்கின்றது. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதலீட்டாளர்களை மகிழ்விக்கும் வகையில் அரசு வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்காததால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | SBI அம்ரித கலசம் திட்டம்... மார்ச் 31ம் தேதி வரை தான் சான்ஸ்... மிஸ் பண்ணாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ