Small Business Tips Tamil : சமீப காலமாக இந்தியர்கள் பலர், வேலை வாய்ப்பை தேடுவதை விடுத்து, சுய தொழில் தொடங்க ஆரம்பித்து விட்டனர். முன்னர் வேலை வாய்ப்பு பெருகி வந்த காலத்தில் அதிகம் பேர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கத்தான் விரும்பினார். இப்படி சுய தொழில் ஆரம்பிப்பதால் நாட்டின் பொருளாதாரம் பெருகுவதோடு மட்டுமன்றி தனி நபரின் வருமானமும் பெருகும் பிற வேலை வாய்ப்புகளும் அதிகமாகும். துறை சார்ந்த, திறன் பயிற்சிகள் உள்ளிட்ட சில படிப்புகள் அதிகமாகி விட்டதால் இந்த சுய தொழில்களும் அதிகரித்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி, ஆரம்பிக்கும் சுய தொழில்களில், சில மிகக்குறுகிய முதலீட்டை கொண்டுள்ளதாகவே உள்ளன. இதனால், பல லட்சம் வருமானத்தையும் பார்க்கலாம். இந்த சுய தொழில்களை எந்த வகையில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்றாலும், ஆன்லைனில் தொடங்கப்படும் சிறுதொழில்கள், அதிக ஆபத்து இல்லாதவையாக பார்க்கப்படுகின்றன. அந்த தொழில்கள் என்னென்ன தெரியுமா? 


SEO கன்சல்டிங்:


தற்போதுள்ள தொழில்களில், அதிகம் பயன்படுத்தப்படும் ஆன்லைன் டூல்களுள் ஒன்று, SEO. அதன் முழு அர்த்தம் Search Engine Optimization. இது, கூகுள் ஆட்ஸ், கூகுள் அனாலட்டிக்ஸ் என அனைத்திற்கும் உபயோகப்படும் ஒரு ஆன்லைன் கருவியாகும். இதை, திறனாக படித்து வைத்துக்கொண்டால் பெரிய பெரிய நிறுவனங்களும் அதிக சம்பளத்திற்கு உங்களை வேலைக்கு எடுத்து கொள்வர். அப்படி வேலை செய்ய விருப்பம் இல்லை என்றால் சுயமாக ஃப்ரீலான்சிங்கும் செய்து தரலாம். 


சமூக வலைதள மேனேஜர்: 


சமூக வலைதளங்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக அபரிபிதமாக உள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களும் தங்களின் சமூக வலைதள பக்கங்களை பெரிதும் வளர்ப்பதற்கு தனித்தனியே ஆட்களை நியமித்திருக்கின்றன. கண்டண்ட் கிரியேட் செய்வது, அவற்றை பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு பதிவிடுவது, போன்ற விஷயங்களை செய்வர். இதை, தனியாக சிறு தொழிலாகவும் செய்யலாம். 


மேலும் படிக்க | ஹோலி பண்டிகைக்கு ஜாக்பாட்.. இலவசமாகப் பெறலாம் எல்பிஜி சிலிண்டர்


மெய்நிகர் உதவியாளர்:


தற்போதைய காலகட்டத்தில், பல நிறுவனங்களுக்கும் மெய்நிகர் உதவியாளர்கள் தேவையாக இருக்கின்றனர். மெய்நிகர் உதவியாளராக எவ்வாறு பணியாற்றுவது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், மெய்நிகர் உதவியாளர் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும். மெய்நிகர் உதவியாளர் என்பவர்கள், தொலைதூர இடத்திலிருந்து ஒரு நிறுவனத்திற்கு பல்வேறு சேவைகளை வழங்குபவராக இருப்பர். 


இந்த சேவைகளில் நிறுவனம் தொடர்பான நிர்வாகப் பணிகள், அழைப்புகள் செய்து தருவது, மின்னஞ்சல்களை அனுப்புவது, நிறுவன கூட்டங்களை திட்டமிடுவது போன்றவை அடங்கும். இன்றைய காலகட்டத்தில் விர்ச்சுவல் அசிஸ்டென்ட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. இது வீட்டில் இருந்தே செய்யும் வேலையாகும். 


வெப் டிசைன்:


படைப்பாற்றல் மிக்கவர்கள், இந்த தொழிலை செய்யலாம். தற்போது, தள்ளுவண்டியில் செயல்படும் ஒரு சிறிய உணவு கடைக்கு கூட, இணையதளம் தேவையாக இருக்கிறது. எனவே, வெப் டிசைனிங் கற்றுக்கொள்வது உங்கள் படைப்பாற்றலை வளர்க்கவும், உங்கள் தொழிலை நீங்களே நிர்வாகிக்கவும் உதவும். இதை முழு நேர வேலையாக பார்ப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும், தனியாக ஃப்ரீலான்சிங் வகையிலும் இதன் மூலம் பலர் வருமானத்தை ஈட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க | EPFO UAN Profile விவரங்களை எத்தனை முறை மாற்ற முடியும்? தேவையான ஆவணங்கள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ