வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பினால் Freelancer Jobs அளிக்கும் 5 முக்கியத்துறைகளின் பட்டியல்

Freelancing Job in India: தற்போது அதிகம் படித்தவர்கள், குறிப்பாக இளைஞர்கள், இப்போது தங்கள் முழுநேர வாழ்க்கையை ஃப்ரீலான்ஸர்களாக செய்ய விரும்புகின்றனர். ஃப்ரீலான்ஸர்களுக்கான இரண்டாவது மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 3, 2021, 10:14 PM IST
  • 2020 ஆம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுக்கு (Q1 மற்றும் Q2) இடைப்பட்ட காலத்தில் புதிதாக ஃப்ரீலான்ஸர்களாக பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளது.
  • கோவிட்-19 தொற்றுநோய்யின் தாக்கத்தால் உலகளவில் சுமார் 400 மில்லியன் பேர் வேலைகளை இழந்தனர்.
  • யு.எஸ். க்குப் பிறகு ஃப்ரீலான்ஸர்களுக்கான இரண்டாவது மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது.
  • ப்ரீலான்ஸர்களின் சந்தை 2025 ஆம் ஆண்டில் 20-30 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பினால் Freelancer Jobs அளிக்கும் 5 முக்கியத்துறைகளின் பட்டியல் title=

Freelancing Jobs Updates: ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துக்கொண்டே, கூடுதலாக சில ஆயிரம் ரூபாய்களை சம்பாதிக்க பகுதிநேர வேலையாக ஃப்ரீலான்சிங்கை (Freelancing) கருதப்பட்ட நாட்கள் முடிந்துவிட்டன. தற்போது அதிகம் படித்தவர்கள், குறிப்பாக இளைஞர்கள், இப்போது தங்கள் முழுநேர வாழ்க்கையை ஃப்ரீலான்ஸர்களாக செய்ய விரும்புகின்றனர். சமீபத்திய தரவுகளின் படி 2020 ஆம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுக்கு (Q1 மற்றும் Q2) இடைப்பட்ட காலத்தில் புதிதாக ஃப்ரீலான்ஸர்களாக பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளது. COVID-19 தொற்றுநோய்களின் போது ஃப்ரீலான்சிங் அதன் வேகத்தை அதிகரித்தது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதி சேவை நிறுவனமான Payoneer அறிக்கை கூறுகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation) கருத்துப்படி, கோவிட்-19 தொற்றுநோய்யின் தாக்கத்தால் உலகளவில் சுமார் 400 மில்லியன் பேர் வேலைகளை இழந்தனர். அதேநேரத்தில் பகுதி நேர பணியாளராக (Freelancing) வேலை பார்த்தவர்கள் ஓரளவு தாக்கு பிடித்தனர் எனத் தெரிவித்துள்ளது. யு.எஸ். க்குப் பிறகு ஃப்ரீலான்ஸர்களுக்கான இரண்டாவது மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது, தற்போது நாட்டில் 15 மில்லியன் ஃப்ரீலான்ஸர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. ஃப்ரீலான்ஸர்களின் சந்தை 2025 ஆம் ஆண்டில் 20-30 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

ALSO READ |  அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பத் தடை இல்லை: புதிய அரசாணை வெளியீடு

தொழில் தொடங்குவது மற்றும் வணிகச் சூழலின் தரத்தைப் பொறுத்தவரை இந்தியா 23 வது இடத்தில் உள்ளது என்று ஸ்டார்ட்அப் பிளிங்க் (StartupBlink) நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் ஃப்ரீலான்ஸர்களை அதிகம் விரும்புகின்றனர் என்று அறிக்கையில் ஸ்டார்ட்அப் பிளிங்க் கூறியுள்ளது. அதாவது முழுநேர ஊழியர்களைக் காட்டிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் வழக்கமாக ஆரம்ப காலக்கட்டத்தில் பண நெருக்கடியில் இருக்கும். அப்பொழுது ஃப்ரீலான்ஸர்களை பணியில் அமர்த்துவது நிறுவனங்களுக்கு செலவு குறைந்ததாக இருக்கிறது. மேலும் ஃப்ரீலான்ஸர்கள் அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் அவர்களை கண்டுபிடிப்பது எளிது.

ஃப்ரீலான்ஸர்கள் அதிகமாக தேவைப்படும் (Highly in Demand for Freelancers) சில துறைகளை உங்களுக்கு பட்டியலிட்டு உள்ளோம். நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பினால், இந்த துறைகளில் முயற்சிக்கலாம். 

1. டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing):

இது மிகவும் பிரபலமான மற்றும் உங்களுக்கு தேவைப்படும் திறன்களில் ஒன்றாகும். குறிப்பாக சந்தையில் தங்கள் நிறுவனம் மிகவும் பிரபலம் அடைய வேண்டும் என புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் விரும்புகின்றன. தேடுபொறிகள் (Search Engines) மற்றும் சமூக ஊடகங்கள் (Social Media) குறித்து தெரிந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் உள்ளவர்களை (Digital Marketer) வேலைக்கு உடனடியாக எடுத்துக்கொள்கின்றனர்.

இந்தியாவில் ஒரு ஃப்ரீலான்ஸ் டிஜிட்டல் சந்தைப்படுத்துபவரின் சராசரி சம்பளம் ஆண்டுக்கு, ரூ. 5,74,152 முதல், ரூ. 9,59,353 வரை இருக்கும் என்று கிளாஸ்டூர் அறிக்கை கூறுகிறது.

ALSO READ |  Recruitment 2021: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் 185 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

2.  இணையதள வடிவமைப்பாளர் (Web Developer):

ஒவ்வொரு நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க ஒரு கவர்ச்சிகரமான வலைத்தளம் (Website) தேவைப்படுவதால் இது நிறுவனத்திற்கு மிகவும் தேவையான மற்றும் தங்கள் நிறுவனத்தை குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்துக்கொள்ள தேவையான ஒன்றாகும். வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பக் காலத்தில் வலை உருவாக்குநர்கள் (Web Developers) எப்போதும் தேவைப்படுகிறார்கள்.

தொழில்முறை சமூக வலைப்பின்னல் நிறுவனமான லிங்க்ட்இன் (LinkedIn), இந்தியாவில் ஒரு ஃப்ரீலான்ஸ் வலை உருவாக்குநர் மாதத்திற்கு சுமார் ரூ. 37,500 சம்பாதிக்கிறார் என்று கூறுகிறார்.

3. உள்ளடக்க எழுத்தாளர் (Content Writer):

புதிய அல்லது ஒரு பெரிய நிறுவனமும் தொழில்முறை உள்ளடக்க எழுத்தாளர்களை அழைக்கின்றன. அவர்கள் அதிக அளவு பார்வையாளர்களை ஈர்க்க உள்ளடக்கத்தை நிர்வகிக்க முடியும். எல்லாமே டிஜிட்டலுக்குச் செல்வதால், ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் உள்ளடக்க எழுத்தாளர்களின் (Digital Content Writer) பெரும் தேவை உள்ளது. 

ஒரு பேஸ்கேல் (PayScale) அறிக்கையின்படி, இந்தியாவில் ஃப்ரீலான்ஸ் உள்ளடக்க எழுத்தாளர்கள் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு ஊதியமாக 487.22 சம்பாதிக்கிறார்கள் மற்றும் மாதத்திற்கு, 16,343 சம்பாதிக்கலாம்.

ALSO READ |  Reliance JIO Vacancy: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; எப்படி விண்ணப்பிப்பது?

4. வரைபட வடிவமைப்பு (Graphic Designing):

பெரும்பாலும் கிராஃபிக் டிசைனர் அல்லது தகவல்தொடர்பு வடிவமைப்பாளர்கள் என அழைக்கப்படுபவர். கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் நிறுவனத்தின் செய்திகளை தகவல்தொடர்புகளை திறம்பட மற்றும் எப்போதும் நிறுவனத்தின் பிராண்ட் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படைப்பு வடிவமைப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஃப்ரீலான்ஸ் கிராஃபிக் டிசைனரின் சராசரி ஒரு மணிநேரத்திற்கு ஊதியமமாக ரூ. 295 ஆகும். பேஸ்கேல் (PayScale) ஒரு அறிக்கையின்படி, கிளாஸ்டூர் (Glassdoor) கிராஃபிக் டிசைனர்களின் ஆண்டு சம்பளம், ரூ. 5,21,505 ஆக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

5. பிளாக்செயின் டெவலப்பர் (BlockChain Developer):

பிளாக்செயின் (Blockchain) என்பது ஒப்பீட்டளவில் புதிய மற்றும் மேம்பட்ட களமாகும். உடல்நலம் (Healthcare), கல்வி (Education), சில்லறை விற்பனை (Retail) உள்ளிட்ட ஒவ்வொரு துறைக்கும் பிளாக்செயின் டெவலப்பர்கள் தேவைப்படுவார்கள். இந்த துறையில் அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான தொழில் வல்லுநர்கள் மட்டும் இருப்பதால், நிறுவனங்கள் திறமையான நிபுணர்களுக்கு அதிக தொகையை செலுத்த தயாராக உள்ளன.

ஒரு ஃப்ரீலான்ஸ் பிளாக்செயின் டெவலப்பர் ஒரு மணி நேரத்திற்கு $10 முதல் $25 வரை சம்பாதிக்கலாம். பிளாக்செயின் டெவலப்பரின் சராசரி ஆண்டு சம்பளம், ரூ. 4,75,000 முதல், ரூ. 9 7,93,000 வரை கிடைக்கலாம்.

ALSO READ |  7th Pay Commission: இந்த மத்திய ஊழியர்களுக்கு DA, HRA, TA சேர்த்து ரூ .2 லட்சம் வரை சம்பளம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News