சேமிப்பு என்பது குழந்தைப் பருவம் முதல் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான நிதி ஒழுக்கம். இதனை யார் ஒருவர் சரியாக செய்கிறார்களோ அவர்களுக்கு நிதிச் சிக்கல் என்பது ஒருபோதும் வராது. எதிர்பாராமல் ஏற்பட்டால்கூட அந்த நிதிச் சிக்கலில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டு விடுவார்கள். அதனால் சேமிப்பு என்ற நிதி ஒழுக்கத்தை எல்லோரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணத்தை சேமிக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. அதில் எப்போதும் முதலீட்டுக்கு ஆபத்து இல்லாத திட்டங்களில் சேமிப்பது பாதுகாப்பானது மற்றும் சிறந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | LIC Index Plus policy: பங்கு சந்தை சார்ந்த அசத்தலான புதிய பாலிஸி... முழு விபரம்!


அந்தவகையில், தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதோடு அரசின் உத்தரவாதமும் கிடைக்கிறது. தபால் நிலையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான திட்டங்கள் உள்ளன. அதில் பெரியர்வர்களுக்கான திட்டம்தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இது மத்திய அரசால் நடத்தப்படுகிறது. மூத்த குடிமக்கள் அதிகமான வட்டி வருமானத்தைப் பெற இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கும்.


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் பயனாளிகள் அதிகபட்சமாக ரூ.30,00,000 வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலாண்டு அடிப்படையில் டெபாசிட் தொகைக்கு வட்டி வழங்கப்படும். இத்திட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. 60 வயது அல்லது அதற்கு மேல் உள்ள எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் வட்டி மூலம் மட்டும் அதிகபட்சமாக ரூ.12,30,000 வரை சம்பாதிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், 8.2 சதவீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ.12,30,000 வட்டிப் பலனைப் பெறலாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ரூ.42,30,000 முதிர்வுத் தொகையைப் பெறலாம். வயதான காலத்தில் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்காமல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து உங்களுடைய தேவைகளை நீங்களே பூர்த்தி செய்ய முடியும். இத்திட்டத்தில் அதிகப் பேர் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | வீடு வாங்கும் கனவை சுலபமாக நனவாக்க சூப்பர் வழி! கூட்டு வீட்டுக் கடன் கொடுக்கும் நன்மைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ