சவுத் இந்தியன் வங்கி, யெஸ் பேங்க், ஆர்பிஎல் வங்கி மற்றும் ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை நவம்பர் 25, 2023 இல் முடிவடையும் வாரத்தில் தங்களுடைய நிரந்தர வைப்பு (FD) விகிதங்களைத் திருத்தியுள்ளன. மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8.60 சதவீதம் வரை வட்டி விகிதத்தைப் பெறலாம். FD காலங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விகிதங்கள் பற்றி மேலும் விபரமாக அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank):


நவம்பர் 20, 2023 அன்று சவுத் இந்தியன் வங்கி FD விகிதங்களைத் திருத்தியது. மூத்த குடிமக்களுக்கு, ஒரு ஆண்டு காலத்திற்கான FD முதலீட்டிற்கு அதிகபட்ச வட்டி விகிதம் 7.50 சதவீதம். இந்த வட்டி விகிதம், சாதாரண குடிமக்களுக்கு கொடுக்கும் வட்டியை விட 0.50 சதவீதம் அல்லது 50 அடிப்படை புள்ளிகள் அதிகம் ஆகும்.


ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை, வட்டி விகிதம் 7.00 முதல் 7.30 சதவீதம் வரை இருக்கும். ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலங்களுக்கு, வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உள்ளது. அதன் சிறப்பு 66 மாத FD அல்லது "கிரீன் டெபாசிட்"  திட்டத்தில், 7.0 சதவீத வட்டி கிடைக்கிறது. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான டெபாசிட்டுகளை பொருத்தவரை, முதிர்வு காலத்திற்கு முன்னால் பணம் எடுப்பதற்கு 0.50 சதவீத அபராதமும், ரூ.5 லட்சத்துக்கும் மேலான டெபாசிட்டுகளுக்கு 1.0 சதவீதமும் அபராதம் விதிக்கிறது. ஜூன் 1, 2022 முதல் தொடங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட அனைத்து FDகளுக்கும் இது பொருந்தும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி: 15% டிஏ ஹைக்... அதிரடியாய் உயர்ந்த அகவிலைப்படி


யெஸ் வங்கி (Yes Bank):


யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு நவம்பர் 21, 2023 அன்று திருத்தப்பட்ட நிலையான வைப்புகளில் 8.25 சதவீதத்தை வழங்குகிறது. 18 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்கும் குறைவான FD முதலீடுகளுக்கு இந்த விகிதம் பொருந்தும். மூத்த குடிமக்களுக்கான வருடாந்திர வட்டி விகிதம் சுமார் 8.51 சதவீதம் ஆகும். மூத்த குடிமக்கள் அல்லாத மற்றவர்களுக்கு, அதே காலத்திற்கான அதிகபட்ச விகிதம் 7.75 சதவிகிதம் மற்றும் வருடாந்திர வட்டி விகிதம் 7.98 சதவிகிதம் ஆகும். ஒரு வருடத்திற்கும் மேலான காலத்திற்கான நிலையான வைப்பிற்கு, வட்டி விகிதம் 7.0 சதவீதத்திற்கு மேல் இருக்கும். மூத்த குடிமக்களுக்கு, ஒரு வருடம் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான FD முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் 7.75-8.25 சதவீதம் வரை இருக்கும்.


RBL வங்கி (RBL Bank):
 
ஆர்பிஎல் வங்கி நவம்பர் 24, 2023 அன்று FD விகிதங்களைத் திருத்தியது. இது மூத்தவர்களுக்கு 12 மாதங்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான FD மற்றும் 24 - மாதங்கள் மற்றும் ஒரு நாள் முதல் 36 மாத FD வரை 8.0 சதவீதத்தை வழங்குகிறது. 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான காலத்திற்கான முதலீடுகளுக்கு,  8.30 சதவீதமும், 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான காலத்திற்கு, 8.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கான அதிகபட்ச விகிதமாகும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆண்டுகள் வரை, விகிதங்கள் 7.50 சதவீதம் முதல் 7.60 சதவீதம் வரை இருக்கும். இந்த விகிதங்கள் முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படும் வகையிலான FDகளுக்கானது. முன்கூட்டியே எடுக்க  அபராதம் வட்டி விகிதத்தில் 1.0 சதவீதம்.


ஷிவாலிக் சிறு நிதி வங்கி (Shivalik Small Finance Bank):
 
சிறு நிதி வங்கிகள் பொதுவாக பெரிய வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி நவம்பர் 24, 2023 அன்று விகிதங்களைத் திருத்தியது. இது மூத்தவர்களுக்கு 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் மற்றும் 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான FDகளுக்கு 8.60 சதவீதத்தை வழங்குகிறது. திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளைப் போலவே, சிறு நிதி வங்கிகளும் 5 லட்சம் ரூபாய் வரையிலான வைப்புத்தொகைகளுக்கு வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் (DICGC) கீழ் உள்ளன.


மேலும் படிக்க | EPFO வைப்பு நிதி உங்கள் அருகில்: தமிழ்நாட்டில் நவம்பர் 28ம் தேதி சிறப்பு முகாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ