Stock Market: பங்குச்சந்தை சற்று மந்தமாகலாம்! கவனம் தேவை!!
மும்பை பங்குச்சந்தையின் குறியீடான Sensex, நேற்று 58.81 புள்ளிகள் குறைந்து 37,871.52 என்ற நிலையிலும் தேசிய பங்குச்சந்தை குறியீடான Nifty 29.65 புள்ளிகள் குறைந்து 11,132 என்ற நிலையிலும் நிறைவடைந்தன.
இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று அதிக அளவு ஏற்றத்தாழ்வுகள் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தையின் குறியீடான Sensex, நேற்று 58.81 புள்ளிகள் குறைந்து 37,871.52 என்ற நிலையிலும் தேசிய பங்குச்சந்தை குறியீடான Nifty 29.65 புள்ளிகள் குறைந்து 11,132 என்ற நிலையிலும் நிறைவடைந்தன.
Nifty-ஐ பொறுத்தவரை 11,000 ஒரு மிகப்பெரிய குறியீட்டு அறிகுறியாக பார்க்கப்பட்டது. இந்த நிலை கடக்கப்பட்டால், பின்னர் ஏறுமுகம் இருக்கும் என்ற கருத்து சந்தையில் நிலவிய அதே நேரத்தில், தொடர்ந்து ஐந்து நாட்களாக குறியீடுகள் அதிகரித்த நிலையில், சந்தைகளில் கன்சாலிடேஷன் அதாவது ஒரு வகையான ஒருங்கிணைப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய நிலவரம் அதையே பிரதிபலித்தது. இன்றைய நிலவரத்தைப் பார்த்தால் சிங்கப்பூர் பங்குச்சந்தையான SGX Nifty துவக்கத்தில் 45 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது. SGX Nifty எப்போதும் நம் இந்திய பங்குச்சந்தைகளின் துவக்கத்திற்கு ஒரு பெரிய முன்மாதிரியாக இருக்கும் ஒரு குறியீடாகும். ஜப்பான் பங்குச்சந்தை இன்றும் நாளையும் மூடியிருக்கும். இதுவும் இந்திய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இன்றும் இந்த வாரமும் வலுவான வாங்கும் திறன் கொண்ட பங்குகளாக நிபுணர்கள் கொடுத்துள்ள Stock Tips பின்வருமாறு:
Axis Bank, ITC, Reliance, Power Grid
தவிர்க்க வேண்டிய Stocks:
Tata Motors, Yes Bank, IOC, Tata Steel
இந்த மாதம் காலாண்டு முடிவுகள் வரவிருக்கும் நிறுவனங்கள்:
ஜூலை 23: Biocon, HDFC AMC, SKF Indj, HDFC AMC, PNB Housing, Agro Tech Foods
ஜூலை 24: Ambuja Cements, Asian Paints
ஜூலை 25: ICICI Bank
ஜூலை 29: Dr.Reddy, Glaxo Smilthkline Pharma
ஜூலை 30: Chola Fin, Dabur
தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். டாலரின் மதிப்பு குறைவதும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகின்றது.
ALSO READ: வரலாறு காணாத விலையில் தகதகக்கும் தங்கம்! வெற்றி விழா காணும் வெள்ளி!!
இன்னும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் சீரடையாத நிலையில் இருப்பதாலும், தடுப்பு மருந்து குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் முழுவதுமாக வரவில்லை என்பதாலும், பங்குகள் வாங்கி விற்பதில் கவனம் தேவை. பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் வரவுள்ள நிலையில், நிறுவனங்களின் நிலை மற்றும் அவற்றின் செயலாக்கத்தைப் பார்த்து பங்குகளை வாங்குவது நல்லது.