Sensex மற்றும் Nifty குறியீடுகள் நிபுணர்களின் கணிப்பிற்கேற்ப நேற்று ஏற்றத்துடன் துவங்கி ஏறிய நிலையிலேயே முடிந்தன. ஆசிய சந்தைகள் சரிவைக் காட்டினாலும், துவக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையில் ஏற்றமே காணப்பட்டது. இன்றும் அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக இந்த வாரம் சந்தைகளில் சிறிய ஏற்றம் காணப்படும் என்ற கணிப்பு இருந்தது. சென்ற வாரம் மூன்று பங்குச் சந்தை நாட்களிலும், நேற்றும், அதாவது, திங்களன்றும் தொடர்ந்து நான்கு நாட்களாக, SENSEX மற்றும் NIFTY தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டுள்ளன. கோவிட்-19 தொற்று காரணமாக, உலகளவில் பொருளாதாரம் மந்தமாகிவிட்ட நிலையில், தற்போது, கோவிட் தடுப்பு மருந்திற்கான சாதகமான செய்திகள் வந்து கொண்டிருப்பது சந்தைகளில் காணப்படும் ஏற்றத்திற்கு ஒரு மிகப் பெரிய காரணமாகும்.


இந்திய பங்குச் சந்தையை பொறுத்த வரையில், பங்குகளை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


ALSO READ: பச்சை வண்ணத்தில் பங்குச் சந்தை குறியீடுகள்: துவக்க நிலை வர்த்தகத்தில் ஏற்றம்!!


இன்றைய நிலவரத்தைப் பார்த்தால் சிங்கப்பூர் பங்குச்சந்தையான SGX Nifty-யும் 108 புள்ளிகள் அதிகரித்துத் தொடங்கியுள்ளது. SGX Nifty எப்போதும் நம் இந்திய பங்குச்சந்தைகளின் துவக்கத்திற்கு ஒரு பெரிய முன்மாதிரியாக இருக்கும் ஒரு குறியீடாகும். அவ்வகையில், இன்றைய இந்திய சந்தைகள் பச்சை வண்ணத்திலேயே துவங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


இன்றும் இந்த வாரமும் வலுவான வாங்கும் திறன் கொண்ட பங்குகளாக நிபுணர்கள் கொடுத்துள்ள Stock Tips பின்வருமாறு:


SBIN, Tata Motors, ICICI Bank, Axis Bank, Wipro, Infosys, HCL Tech.


தவிர்க்க வேண்டிய Stocks:


BPCL, Cipla, Yes Bank.


எனினும், இன்னும் கொரோனா தொற்று காரணமாக இன்னும் பொருளாதாரம் சீரடையாத நிலையில் இருப்பதாலும், தடுப்பு மருந்து குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் முழுவதுமாக வரவில்லை என்பதாலும், பங்குகள் வாங்கி விற்பதில் கவனம் தேவை. பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் வரவுள்ள நிலையில், நிறுவனங்களின் நிலை மற்றும் அவற்றின் செயலாக்கத்தைப் பார்த்து பங்குகளை வாங்குவது நல்லது.