திருமணம் இந்தியாவில் முக்கியமான கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெறும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலத்தில் திருமணங்களுக்கு அதிக சாஸ்திரம், சம்பர்தாயம் உள்ளது. திருமண உறவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை வருவது சகஜம் தான் என்றாலும் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். சிறிய விரிசல் கூட பெரிய பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே முடிந்தவரை சூழ்நிலைகளுக்கு ஏற்ப விட்டுக்கொடுக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த தொகைக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய கூடாது! வரி விதிக்கப்படலாம்!


கணவன் - மனைவி இடையே ஒருகட்டத்தில் சண்டை அதிகமாகும் போது இருவரும் பிரிந்துவிடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருமணத்திற்கு பெண் வீட்டார்களிடம் இருந்து பெற்ற நகைகள் மற்றும் பிற பரிசு பொருட்களை அந்த பெண் திரும்பி கேட்கும் போது பல மாப்பிளை வீடுகளில் தருவதில்லை. இந்த பணம் மற்றும் நகைகளில் மாப்பிள்ளை வீட்டு பங்கும் உள்ளது என்று வாக்குவாதம் செய்கின்றனர். இதனால் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் திருமத்திற்கு பிறகு ஒரு பெண் பெறும் பரிசுகள் அவர்களது தனிப்பட்ட சொத்து என்றும், அதில் யாருக்கும் உரிமை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு


கேரளாவில் சமீபத்தில் நடந்த ஒரு வழக்கில், திருமணம் நடைபெற்ற இரவு தனது கணவர் தனது நகைகள் அனைத்தையும் அவரது அம்மாவிடம் கொடுத்துவிட்டார் என்றும், பிறகு இருவரும் சேர்ந்து அவர்கள் குடும்ப கடனை கட்ட அந்த நகைகளை பயன்படுத்தி கொண்டனர் என்று குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என கூறிய நீதிமன்றம் அனைத்து நகை மற்றும் பொருட்களை திருப்பி தருமாறு கணவருக்கு உத்தரவிட்டது. வீட்டின் கடினமான சூழ்நிலையில் மனைவியின் அனுமதியுடன் அவரது நகைகளை பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த நகைகளை திரும்ப தருவது கணவன்  என்பதையும் கூறி உள்ளது. இந்த நகைகளில் கணவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், முழுக்க முழுக்க மனைவிக்கு மட்டுமே சொந்தமானது என்று தெளிவுபடுத்தி உள்ளது.


ஸ்டிரிடன் என்றால் என்ன?


ஒரு பெண் திருமணத்திற்கு முன் அல்லது திருமணத்திற்கு பின் பரிசாக பெறும் அனைத்து பொருட்களும் ஸ்டிரிதான். இதில் புடவைகள், நகைகள், சொத்துக்கள் மற்றும் பிற பரிசுகள் அடங்கும். சட்டபூர்வமாக வரதட்சணை மற்றும் ஸ்டிரிடன் இரண்டு வேறுபட்டவை. வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்றாலும் ஸ்திரதானை சட்டப்பூர்வமாக எடுத்து கொடுக்கலாம். அன்பு பரிசாக கொடுப்பதும் இதில் அந்த பெண்ணுக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது. இந்த நகை மற்றும் பிற பொருட்களை அந்த பெண் விரும்பியபடி பயன்படுத்தலாம், யாருக்கும் கொடுக்கலாம், விற்கலாம். அதில தலையிட யாருக்கும் உரிமை இல்லை. 


மேலும் படிக்க | பிரதான் மந்திரி திட்டத்தில் இலவச வீடு பெறுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ