பெண் குழந்தைகளுக்கான பல சிறப்பு முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இந்த முதலீட்டு திட்டங்கள், பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் பாதுகாவலர்கள், தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்காக கணிசமான நிதியை உருவாக்க உதவுகின்றன. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நிம்மதியானதாக மாற்ற சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மாதத்திற்கு ரூ. 1,000 முதலீடு செய்தால் குழந்தை மேஜராகும்போது ரூ.14,41,466 லட்சம் அளவிலான நிதியை உருவாக்க உதவும். முறையான முதலீட்டுத் திட்டத்தை (SIP) பற்றி விவாதிப்போம்.


18 வயதில் ரூ. 14,41,466 தொகை
குழந்தை வளரும்போது பெரிய தொகையைக் சேமிப்பது ஒன்றும் மிகப் பெரிய கம்ப சாஸ்திரம் இல்லை. ஆனால், அதற்கு தொடர்ச்சியான மாத முதலீடு அவசியம். குழந்தை பிறந்தவுடன் SIP ஐத் தொடங்க வேண்டும். பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், SIP இல் சந்தை அபாயங்களும் இடர்களும் இருப்பதை மறுக்க முடியாது என்றாலும், நீண்ட கால SIP உங்களுக்கு வேறு எந்த திட்டத்திலும் கொடுக்காத அளவு வருமானத்தைக் கொடுக்கும்.


மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செதால், எஸ்ஐபிக்கள் சராசரி வருமானம் 12 சதவீதமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இது சில நேரங்களில் இதை விட அதிகமாக இருக்கலாம்.


1,000 ரூபாயில் SIPஐத் தொடங்கலாம்
குழந்தை பிறந்தவுடனே 1000 ரூபாய் முதலீட்டில் SIP (Systematic investment plan) தொடங்கினால், 18 வயதிற்குள் 14 லட்சத்திற்கும் அதிகமான தொகையை சேர்க்கலாம். அத்துடன் ஆண்டுதோறும் SIP-ல் 10 சதவிகிதம் டாப்-அப் செய்ய வேண்டும். டாப்-அப் எஸ்ஐபி என்பது உங்கள் வழக்கமான எஸ்ஐபியில் மேலும் கொஞ்சம் பணத்தை சேர்க்கும் வசதி. நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டுத் தொகையை 10 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும் என்பதால் அது பெரிய தொகை அல்ல.


மேலும் படிக்க | மாணவர்களுக்கான கிரெடிட் கார்டு திட்டம் : 4 லட்சம் ரூபாய் வட்டி இல்லாமல் கிடைக்கும் - பெறுவது எப்படி?


SIP கணக்கீடு
குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு 1000 ரூபாயுடன் SIP ஐ தொடங்குகிறீர்கள் என்றால் முதலாண்டு முழுவதும் 1,000 ரூபாய் டெபாசிட் செய்தால் போதும். இரண்டாம் ஆண்டில் 1,000-ல் 10 சதவீதம் அதாவது ரூ.100-ஐ அதிகரித்து இரண்டாம் ஆண்டில் மாததோறும் ரூ.1100 சேமிக்க வேண்டும்.


மூன்றாம் ஆண்டில் ரூ.1100-ல் 10 சதவீதத்தை அதிகரித்தால் ரூ.110, இந்தப் பணத்தை சேர்த்து 1210 ரூபா என்ற அளவில் அதிகரிக்கும். இதேபோல், ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே இருக்கும் தொகையில் 10 சதவீதத்தை சேர்த்து முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.


முதலீட்டை அதிகரித்து SIP செய்யும் இந்த ஃபார்முலாவை 18 வருடங்கள் தொடர வேண்டும். அப்படியானால், 18 ஆண்டுகளில் மொத்தம் ரூ.5,47,190 முதலீடு செய்யும் நிலையில், முதலீட்டிற்காக 12 சதவீத வட்டியாக ரூ.8,94,276 ஆக இருக்கும். எனவே, 18 ஆண்டுகளுக்குப் பிறகு, SIP ரூ. 14,41,466 பெறுவீர்கள்.


இந்தத் தொகை உங்கள் குழந்தை வளர்ந்த நிலையில் குழந்தையின் தேவையான செலவுகளுக்கு உதவியாக இருக்கும். 12 சதவிகித வருமானம் என்பது 15 சதவீதம் வரை இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம், அப்படியானல், 18 ஆண்டு மாதாந்திர சேமிப்பு உங்களுக்கு சுமார் 19 லட்சம் ரூபாய் நிதியை உருவாக்கித்தரும்.  


(பொறுப்புத் துறப்பு: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும். இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்... சில முக்கிய அம்சங்கள் விபரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ