சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான மேலும் சில அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிகளில் குடும்ப தலைவிகளுக்கு ஆறுதல் அளிக்கும் முக்கிய அறிவிப்பை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம், பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் போன்ற திட்டங்கள் உடனடியாக கொண்டு வரப்பட்டாலும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் தான் அமல்படுத்தப்பட்டது.


கடந்த தேர்தல் பரப்புரையில் சொன்ன அறிவிப்பு நல்ல வேலை செய்திருக்கிறது என்று தேர்தல் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அடுத்த ஆண்டு, அதாவது 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இதே திட்டத்தின் பலனை மேலும் அறுவடை செய்ய ஆளும் கட்சி திட்டமிடுவதாக தெரிகிறது. 


மேலும் படிக்க | ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றங்கள்! உலோகன்னாலும் தங்கம் இல்லையா


இதற்காக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம். அதாவது, பயனாளிகளுக்கான தகுதிகள் தொடர்பான தளர்வுகளை தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும். இது பெண்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்.


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimmai Thogai) திட்டம் தொடங்கப்பட்டபோது ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது மேல்முறையீடு செய்த மகளிரில் 7.35 லட்சம் பேருக்கு, இந்த மாதம் முதல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை  வழங்கப்படுகிறது. 


கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்து இணைக்கப்பட்ட 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு நவம்பர் 10ம் தேதி முதல் 1000 ரூபாய் தொகை வழங்கும் பணி தொடங்கியது. அதுவரையிலும் அரசு குறித்த மக்களின் அதிருப்தி நிலை, இதன் பிறகு மாறி உள்ளதாகவும் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமை தோகை பெற மேலும் 7.35 லட்சம் பேர் தேர்வு? லேட்டஸ்ட் அப்டேட்


2024 மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று விரும்பும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் அதற்கு உதவியாக இருக்கலாம். மேலும் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில வாரங்கள் முன்னதாக இத்திட்டத்தில் பயனாளர்களின் தகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்து மேலும் அதிக பயனாளர்களை இணைக்க தமிழ்நாடு அரசு (TN Government)  திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டு,  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Thittam) என்று அறியப்படுகிறது.


மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு சர்ப்ரைஸ் -  மாதம் 1000 ரூபாய் - அரசின் திடீர் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ