சென்னை: தமிழகத்தில் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டத்தில் நடப்பு மாதம் மேலும் 7.35 லட்சம் பயனாளிகள் இணைந்துள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இரண்டு மாதங்கள் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்திற்கு தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்தனர்.
தொடக்கத்தில் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக இருக்கும் நிலையில், மேல்முறையீடு செய்த மகளிரில் 7.35 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றங்கள்! உலோகன்னாலும் தங்கம் இல்லையா
செப்டம்பர் - அக்டோபர் உரிமைத்தொகை
செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. அதேபோல் அக்டோபர் மாதம் 15ம் தேதி வங்கிகள் விடுமுறை என்பதால், அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை (October Installement) ஆயிரம் ரூபாய், ஒரு நாள் முன்னதாகவே அதாவது 14ம் தேதியே பணம் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் அறிவிப்பு
செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர்தொகை வழங்கப்பட்டாலும், தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு(TN Government) அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டு பெண்களில் லட்சக்கணக்கானோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
உரிமைத் தொகை பெற தகுதி
ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்ப உறுப்பினர்கள், ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள், வருமானத்தின் அடிப்படையில் உரிமைத்தொகை பெற தகுதியில்லாதவர்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், கைம்பெண்கள் ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள். ஊராட்சி மன்ற தலைவர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியவர்களும், சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய தகுதி இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Thittam) என்று அறியப்படுகிறது.
மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு சர்ப்ரைஸ் - மாதம் 1000 ரூபாய் - அரசின் திடீர் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ