இந்தியாவில் மொபைல் உற்பத்தியில் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால் மொபைல் உற்பத்திக்கான பாகங்கள் இன்னும் வெளியில் இருந்து பெறப்படுகின்றன. எனினும், இந்த நிலை இன்னும் சில நாட்களில் மாறவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

TATA Sons இப்போது நாட்டில் மொபைல் பாகங்கள் தயாரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மொபைல் பாகங்கள் உற்பத்திக்காக டாடா சன்ஸ் தமிழகத்தில் ஒரு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் (Tamil Nadu) வரும் ஆலை காரணமாக தமிழகத்தில் பலருக்கு வேலை வாய்ப்புக்கான ஒரு நல்ல வழி பிறக்கும். இளைஞர்களுக்கு இந்த மொபைல் பாகங்கள் உற்பத்தி ஆலை, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், நல்ல பயிற்சியைப் பெறவும் ஒரு கருவியாக இருக்கும்.


இந்த ஆலைக்கு வெளிநாட்டிலிருந்து சுமார் பில்லியன் டாலர் கடனுக்காக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. Tata-வின் ஆலையில் முதலில் iPhone பாகங்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


கிடைத்த தகவல்களின்படி, மொபைல் பாகங்கள் ஆலையை திறப்பதற்கான யோசனை TATA Sons குழுமத் தலைவர் என் சந்திரசேகரனுடையது.


கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று பரவிய பிறகு, Apple போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் உற்பத்திக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இந்த நிறுவனங்களின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பி, இந்தியாவில் பாகங்கள் தயாரிக்க வேண்டும் என்பது சந்திரசேகரனின் திட்டம்.


இந்த ஆலை ஐபோனுக்கான பாகங்களுடன் தொடங்கி, பின்னர் தென் கொரியா மற்றும் ஜப்பானின் அசல் கருவி உற்பத்தியாளர்களுடன் (OEM) கூட்டுசேரும் என்று கூறப்படுகிறது.


ALSO READ: ATM-ல் பணம் எடுக்க புதிய விதிமுறை; 6 மணி நேரம் காத்திருக்க வேண்டும்


1.5 பில்லியன் டாலர் கடன்


இந்த திட்டத்திற்காக Tata 1.5 பில்லியன் டாலர் கடனைப் பெற தயாராகி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், எக்ஸ்டர்ணல் கமர்ஷியல் பாரோயிங் (ECB) மூலம் 75 மில்லியன் முதல் ஒரு பில்லியன் டாலர் வரை திரட்டப்படும். புதிய ஆலை மற்றும் நிறுவனத்தை வழி நடத்திச் செல்ல ஒரு தலைமை நிர்வாக அதிகாரிக்கான நியமனமும் நடக்கவுள்ளது.


சமீபத்தில்தான் எலெக்ட்ரானிக்ஸ் வன்பொருள் உற்பத்தி கொள்கை 2020 ஐ தமிழக அரசு (Tamil Nadu Government) அறிவித்தது. 2025 ஆம் ஆண்டிற்குள் உற்பத்தின் மதிப்பை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதை இந்த கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய மொத்த மின்னணு ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்காக இருக்கும். டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தமிழக தொழில்துறை கழகம் ஹோசூரில் (Hosur) 500 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.


ALSO READ: வங்கியில் உங்களுக்கு FD கணக்கு இருக்கா?; அப்போ உங்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR