Tax on EPF Withdrawal: பிஎஃப் பணத்தை எடுத்தால் வரி செலுத்த வேண்டுமா? இதற்கான விதிகள் என்ன?
Tax on EPF Withdrawal: பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வரி செலுத்த வேண்டுமா? இதை பற்றி இபிஎஃப் உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
Tax on EPF Withdrawal: சம்பளம் பெறும் தொழில் வல்லுநர்களுக்கு இது முக்கியமான நேரம். இப்போது தங்கள் சம்பளத்தின் மீதான வரியைக் கணக்கிட்டு சரியான நேரத்தில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். சம்பளத்திற்கான வரியத் தவிர, வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும்போது, நீங்கள் மற்ற ஆதாரங்களில் இருந்து பெற்ற வருமானத்தையும் காட்ட வேண்டும். இந்த பிற வருமானங்களுக்கு வரியும் விதிக்கப்படலாம். எந்த விதத்தில் வருமானம் வந்தாலும் வரி செலுத்த வேண்டுமா? எப்படிப்பட்ட வருமானம் வரி வரம்பிற்குள் வருகிறது? இவற்றை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
PF Withdrawal: இதற்கு வரி செலுத்த வேண்டுமா?
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்குகளில் அனைத்து ஊழியர்களும் மாதாம் மாதம் ஒரு தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. பணி ஓய்விற்கு பிறகு இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணியாளர்கள் பணத்தை எடுக்கலாம். இது தவிர சில சிறப்பு சந்தப்பங்களில் பணி ஓய்வுக்கு முன்னரே பணம் எடுக்கும் வசதியும் உள்ளது. பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வரி செலுத்த வேண்டுமா? இதை பற்றி இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தெரிந்துகொள்ள வேண்டும்.
EPF Withdrawal: எந்த சூழ்நிலையில் வரி செலுத்த வேண்டும்?
1. 5 ஆண்டுகளுக்கு முன் பணம் எடுத்தால்
ஐந்து வருட பங்களிப்பு முடிவதற்குள் பணியாளர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுத்தால், அதற்கு TDS செலுத்த வேண்டும். வரி செலுத்தாமல் இருக்க, நீங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியில் இருப்பது அவசியம். இதில், புதிய மற்றும் பழைய நிறுவனங்களுடனான அதாவது பணியாளர் அதுவரை வேலை செய்த நிறுவனங்களின் பணிக்காலம் கணக்கிடப்படுகிறது. ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலான பணிக்காலம் முடிந்த பிறகு ஒருவர் தனது இபிஎஃப் இருப்பை (EPF Balance) பழைய நிறுவனத்திடமிருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றினால் உங்கள் பிஎஃப் நிதியில் TDS கழிக்கப்படாது.
2. இந்த ஐந்து வருடங்களில் பணி தற்காலிகமானதாக இருந்தால்
ஒருவர் ஐந்து வருட காலத்திற்கு ஒப்பந்தத்தில் பணிபுரிந்தால், அவருக்கு PF டெபாசிட் செய்யப்படாது. அவரது PFக்கு அவரது நிறுவனம் பங்களிக்க வேண்டியதில்லை. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அவரது வேலை நிரந்தரமாகி, பிஎஃப் கழிக்கப்படத் தொடங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலையை அவர், 5 வருடங்கள் முடித்த பிறகு, தனது EPF இருப்பை வேறு எங்காவது மாற்ற விரும்பினால், அதற்கு வரி விதிக்கப்படும். ஏனெனில் அவர் முடித்துள்ள 5 ஆண்டுகளில் சில பகுதி தற்காலிக பணியாக இருந்துள்ளது.
3. உங்கள் நிதி அங்கீகரிக்கப்படாத நிலை
வருமான வரி ஆணையரிடம் ஒப்புதல் பெறாத வருங்கால வைப்பு நிதி வரி விலக்கு பெற தகுதியற்றதாகக் கருதப்படுகிறது. இதற்கு வருங்கால வைப்பு நிதி அல்லது வேறு சில நிறுவனங்களில் அங்கீகாரம் கிடைத்திருக்கலாம். ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுக்கும்போது விலக்கு பெற, வருமான வரி ஆணையரின் ஒப்புதல் தேவை. நீங்கள் URPF உறுப்பினராக இருந்தால், ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை எடுக்கும்போது வரி விதிக்கப்படும்.
மேலும் படிக்க | இந்தியாவிற்குள் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! விலை எவ்வளவு தெரியுமா?
இந்த வழியில் இதை எளிதாக புரிந்து கொள்ளாலாம்:
1. பணியில் தொடர்ந்து 5 வருட சேவையை முடிப்பதற்கு முன் ரூ.50,000க்கு குறைவாக பணம் எடுத்தால்
- டிடிஎஸ் கழிக்கப்படாது. ஆனால் அந்த நபர் வரி விதிக்கக்கூடிய பிராக்கெட்டுக்குள் வந்தால், அவர் தனது வருமானத்தில் ஈபிஎஃப் வித்ட்ராயலைக் காட்ட வேண்டும்.
2. தொடர்ந்து 5 வருட சேவையை முடிக்கும் முன் ரூ.50,000க்கு மேல் எடுத்தால்
பான் எண் கொடுத்தால் 10% டிடிஎஸ் கழிக்கப்படும். படிவம் 15G/15H -ஐ சமர்பித்தால் அதுவும் கழிக்கப்படாது.
3. ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு நீங்கள் EPF இலிருந்து பணம் எடுத்தால்
- டிடிஎஸ் கழிக்கப்படாது. இதை ரிடர்ண் ஆஃப் இன்கமிலும் காட்ட வேண்டாம்.
4. வேலை மாறிய பிறகு ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு PF பணத்தை மாற்ற விரும்பினால்
- டிடிஎஸ் கழிக்கப்படாது. இது வருமான வரியில் காட்டப்பட வேண்டியதில்லை. இது வரிக்கு உட்பட்டது அல்ல என்பதே அதன் காரணம்.
5. ஐந்தாண்டு பணியை முடிக்கும் முன் சில காரணங்களால் வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தால்/பணம் எடுப்பதற்கான காரணம் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருந்தால்
- டிடிஎஸ் கழிக்கப்படாது. இது வருமான வரியில் காட்டப்பட வேண்டியதில்லை. இது வரிக்கு உட்பட்டது அல்ல என்பதே அதன் காரணம்.
மேலும் படிக்க | இனி பணம் எடுக்க ஏடிஎம் செல்ல வேண்டாம்! வீடு தேடி பணம் வந்து சேரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ