புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகியிடமிருந்து மிகப் பெரிய செய்தி வந்திருக்கிறது. சமீபத்தில் இரண்டு மாடல்களில் தொழில்நுட்ப கோளாறு தொடர்பான புகார்களை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆராய்ந்து ஆலோசித்த மாருதி நிறுவனம், அதிகமாக விற்பனையாகும் இந்த இரண்டு சிறந்த மாடல்களின் கார்களை திரும்பப் பெற்றுள்ளது. கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாடிக்கையாளருக்கு அந்த கார்கள் திருப்பிக் கொடுக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Wagon-R, Baleno (Petrol) இரண்டு வகை கார்களிலும் எரிபொருள் பம்ப் சரியாக இல்லை என்ற  புகார்களைப் பெற்ற மாருதி சுசூகி நிறுவனம் அதில் இருந்த தொழில்நுட்பக் குறைபாட்டைக் கண்டறிந்தனர். தவறான எரிபொருள் விசையியக்கக் குழாயை (fuel pump) சரிபார்த்து மாற்றுவதற்காக மொத்தம் 1,34,885 Wagon-R, Baleno (Petrol) மாடல் கார்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


Also Read | பூமியை நெருங்கும் அரிய NEOWISE வால்நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியுமா?


பங்குச் சந்தைகளுக்கு அனுப்பப்படும் ஒழுங்குமுறை தகவல்களில், MSI இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, தாங்களாகவே முன்வந்து இந்த பணியை மேற்கொள்ளவிருப்பதாக மாருதி கூறியுள்ளது. 2018 நவம்பர் 15 முதல் 2019 அக்டோபர் 15 வரை தயாரிக்கப்பட்ட Wagon-R (one liter) மற்றும் 2019 ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 4 வரை தயாரிக்கப்பட்ட Baleno (Petrol) கார்கள் என தான் திரும்பப் பெறும் மாடல்களையும் மாருதி குறிப்பிட்டுள்ளது.


இந்த இரண்டு வகை கார்களின் 1,34,885 வாகனங்களையும் திருப்பப் பெற்று அவற்றை சரி செய்து தரப் போவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.  


“நிறுவனத்தின் இந்த முயற்சியால், Wagon-R கார்கள் 56,663 மற்றும் Baleno (Petrol) கார்கள் 78,222 என மொத்தம் 1,34,885 கார்களில் fuel pump எந்தவித கட்டணமும் இல்லாமல் மாற்றித் தரப்படும். 


எதிர்வரும் நாட்களில், குறிப்பிட்ட காலகட்ட்த்தில் விற்பனை செய்யப்பட்ட Wagon-R, Baleno பெட்ரோல் ரக கார்களின் உரிமையாளரை மாருதி சுசூகி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் தொடர்பு கொள்வார் என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.