பூமியை நெருங்கும் அரிய NEOWISE வால்நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியுமா?

சூரியனுக்கு மிக அருகில் சென்று திரும்பும் அரிதான NEOWISE வால்நட்சத்திரத்தை 2020 மார்ச் 27ஆம் தேதியன்று முதன்முதலில் நாசா கவனித்தது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2020, 08:52 PM IST
  • அடுத்த 20 நாட்களுக்கு NEOWISE வால்நட்சத்திரத்தை பார்க்கலாம்
  • இந்தியாவில் சில இடங்களில் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும்
  • அடுத்த 6,800 ஆண்டுகளுக்கு இந்த வால் நட்சத்திரம் பூமியின் வானத்திற்கு திரும்பாது
பூமியை நெருங்கும் அரிய NEOWISE வால்நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியுமா? title=

புதுடெல்லி: National Aeronautics and Space Administration (NASA) கண்டுபிடித்த நியோவைஸ் (NEOWISE) என்ற புதிய வால்நட்சத்திரத்தை பல skywatcherகள் பார்த்து உறுதி செய்துள்ளன.  

"நீங்கள் வானத்தை கூர்ந்து கவனித்து வந்தால் NEOWISE வால்நட்சத்திரத்தை இப்போது, வால்நட்சத்திர தொலைநோக்கிகள் அல்லது ஒரு சிறிய தொலைநோக்கி மூலம் சுலபமாக பார்க்க முடியும்" என்று நாசா கூறுகிறது.

ஜூலை 7 ஆம் தேதி நிலவரப்படி, தொலைநோக்கியின் மூலம் NEOWISE வால்நட்சத்திரத்தை சுலபமாக பார்க்க முடிந்ததாகவும், சிலர் அதை நேரடியாக எந்தவித தொலைநோக்கிகளின் உதவியும் இல்லாமல் பார்க்க முடிந்தது என்றும் நாசா கூறுகிறது.

NEOWISE வால்நட்சத்திரத்தை இந்த வாரம் பார்க்கும் கோணம் தற்போது வடகிழக்கு திசையிலிருந்து வடமேற்கு திசைக்கு மாறிவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது.

2020 மார்ச் 27 அன்று நாசாவால் முதன்முதலில் காணப்பட்ட வால்மீன் நியோவைஸ், ஜூலை 22 அன்று, பூமியில் இருந்து103 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும்.

Read Also | திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையின் மதிப்பு என்ன? தெரியுமா?

நியோவைஸ் (NEOWISE) விடியலின் போது, ஒரு மணி நேரத்திற்கு வடகிழக்கு திசையில் அடிவானத்திற்கு 10 டிகிரி மேலே தென்படும்.

ஜூலை மாத மத்தியில் இருந்து நியோவைஸ் மாலை நேரத்தில் காட்சியளிக்கும். இது வடமேற்கு திசையில் அடிவானத்திற்கு மேலே காணப்படும்.

குறைந்த அட்சரேகைகளில் (latitude) உள்ளவர்கள், வால் நட்சத்திரத்தை வானத்தில் தாழ்வான பகுதியில் காண்பார்கள் என்றும், அது அங்கிருந்து வடக்கே தொலைவில் உள்ளவர்களுக்கு, இன்னும் சற்று மேலே தெரியும்  என்றும் நாசா தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் பதானி சமந்தா கோளரங்கத்தின் (Pathani Samanta Planetarium) துணை இயக்குநர் டாக்டர் சுபேந்து பட்நாயக், ANI செய்தி நிறுவனத்திடம் பேசினார். "ஜூலை 14 முதல், C/2020 F3 வடமேற்கு வானத்தில் தெளிவாகத் தெரியும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அடுத்த 20 நிமிடங்களுக்கு வால் நட்சத்திரத்தைப் பார்க்க முடியும் 20 நாட்கள் வரை இந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்கலாம். மக்கள் அதை நேரடியாக எந்தவித கருவியின் உதவியும் இல்லாமல் கண்டு ரசிக்கலாம்."

"ஒரு ஜோடி தொலைநோக்கிகள் அல்லது ஒரு சிறிய தொலைநோக்கி அதன் தெரிவுநிலையை மேம்படுத்தும்," என்று அவர் கூறினார்.

அடுத்த 6,800 ஆண்டுகளுக்கு இந்த வால் நட்சத்திரம் பூமியின் வானத்திற்கு திரும்பாது என்றும் நாசா கூறியது.

பூமிக்கு மிக அருகில் வருவதால் மாலை நேரத்தில் வடக்கு வானில் இதை நீங்கள் எளிதாகப் பார்க்க முடியும். இந்த வாய்ப்பு இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வாய்க்காது என்பதால் அடுத்த 20 நாட்களுக்குள் NEOWISE வால்நட்சத்திரத்தை ஒரு முறையாவது பார்த்துவிடுங்கள்…

Trending News