இந்திய சந்தையில் நுழையும் திட்டத்தை கைவிட்ட டெஸ்லா?
டெஸ்லாவிற்கு அரசாங்கம் சலுகை வழங்காததால், அந்நிறுவனம் இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை டெஸ்லா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷோரூமுக்கு தேவையான இடத்தை தேடுவதை கைவிட்டு, குறைந்த இறக்குமதி வரியைப் பெறத் தவறியதால் நிறுவனம் அதன் உள்நாட்டு குழுவில் சிலரை மீண்டும் நியமித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி மையங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய டெஸ்லா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
மேலும் படிக்க | 30 நிமிடத்தில் கார் லோன் வழங்கும் HDFC! முழு விவரம்!
ஆனால் அரசாங்கம், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 100% சிறப்பான செயல்திறனுடன் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு விலையை குறைப்பதற்கு முன் உள்நாட்டிலேயே வாகனங்களை உற்பத்தி செய்ய டெஸ்லா நிறுவனம் உறுதியளிக்குமாறு உத்தரவிட்டது. டெஸ்லாவிற்கு அரசாங்கம் சலுகை வழங்காததால், அந்நிறுவனம் இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களை திறப்பதற்கு வசதியான இடங்களை தேட டெஸ்லா நிறுவனம் பல மாதங்களாக முயற்சி மேற்கொண்டு வந்தது, ஆனால் தற்போது அந்த திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சில செய்திகள் கூறப்படுகிறது.
டெஸ்லா இந்தியாவில் உள்ள சில சிறிய டீம்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் இந்திய கொள்கை நிர்வாகி மனுஜ் குரானா கூடுதலாக சில தயாரிப்புகளையும் ஏற்றுக்கொண்டார். கடந்த ஜனவரி மாதத்தில் தலைமை நிர்வாகி எலன் மஸ்க் கூறுகையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்ய அரசாங்கத்துடன் நிறைய சவால்களைச் சந்தித்து வருகிறது என்று கூறியுள்ளார். "மேக் இன் இந்தியா" பிரச்சாரத்தின் மூலம் உற்பத்தியாளர்களை கவர்ந்திழுக்க அரசாங்கம் முயற்சி செய்தது. சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கார்களை இறக்குமதி செய்வது டெஸ்லா நிறுவனத்திற்கு நல்ல திட்டமாக இருக்காது என்று போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மேலும் படிக்க | முதலீட்டு டிப்ஸ்: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 15 x 15 x 15 பார்முலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR