TikTok: 3 பில்லியன் பதிவிறக்கங்களுடன் புதிய சாதனை படைத்தது டிக்டாக்
ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே இரண்டிலும் உலகளவில் 3 பில்லியன் பேர் டிக்டேக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். இந்தியா உட்பட பல நாடுகளால் தடை செய்யப்பட்ட செயலியின் இந்த பிரமிக்க வைக்கும் வளர்ச்சி ஆச்சரியம் அளிக்கிறது...
இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் 3 பில்லியன் நிறுவல்களுடன் பேஸ்புக்கின் பிரத்யேக களத்தில் நுழைகிறது. பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் செயலியை உலகளவில் 3 பில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்தியா உட்பட சில நாடுகளில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், டிக்டாக்கின் பிரபலமும், பயன்பாடும் குறையவில்லை, பதிலாக அது மேலும் செழித்து வளர்ந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப் ஸ்டோரில் (App Store) 3 பில்லியன் பேர் பதிவிறக்கம் செய்த சாதனையை பதிவு செய்துள்ளது. பேஸ்புக்கைத் தவிர இந்த சாதனையை வேறு எந்த செயலியும் செய்யவில்லை. அதாவது விளையாட்டு செயலி அல்லாத எந்தவொரு செயலியையும் 3 பில்லியன் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்ததில்லை.
Also Read | இனி உங்கள் facebook chat-ல் ஒலியுடன் அசத்தும் எமோஜிக்கள், புதிய அம்சம் அறிமுகம்
குறுகிய வீடியோ பயன்பாடான டிக்டேக், ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே இரண்டிலும் உலகளவில் 3 பில்லியன் பதிவிறக்கங்களை கொண்டுள்ளது என்று செயலிகள் தொடர்பான செய்திகளை வெளியிடும் (app intelligence firm) Sensor Tower ஒரு வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
3 பில்லியன் நிறுவல்களைத் தாண்டிய வாட்ஸ்அப், மெசஞ்சர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நான்கு செயலிகளும் ஒரே சமூக ஊடக நிறுவனத்திற்கு சொந்தமானவை. செயலி நிறுவல்களின் தரவு ஸ்மார்ட்போன்களில் முன்பே நிறுவப்பட்ட செயலிகளைத் தவிர்த்து, உலகளாவிய பதிவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.
டிக்டாக் செயலியில் உலகளவிலான நுகர்வோர் இப்போது 2.5 பில்லியன் டாலர்கள் செலவு செய்கின்றனர். டிண்டர், நெட்ஃபிக்ஸ், யூடியூப், டென்சென்ட் வீடியோ (Tinder, Netflix, YouTube, and Tencent Video) ஆகியவை மட்டுமே 2.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானம் ஈட்டிய விளையாட்டு அல்லாத செயலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | 20 லட்சம் பேரின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்; அதிர்ச்சி
கடந்த ஆண்டு இந்திய - சீன லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு கருதி டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.
சாதாரண மனிதர்கள் பிரபலமடைய விரும்புவது இயல்பே, ஆனால் அதற்கான பாதை சாதாரணமானது அல்ல. இந்த விஷயத்தை மாற்றியவை சமூக வலைத்தளங்கள்.
அதிலும் டிக்டாக் போன்ற செயலிகள் சாமானியர்களையும் பிரபலமடையச் செய்தது.
சாமானியர்களாக இருந்த பலர் டிக்டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு, அதன்மூலம் பிரபலங்களாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தியா உட்பட பல நாடுகளால் தடை செய்யப்பட்ட செயலியின் இந்த பிரமிக்க வைக்கும் வளர்ச்சி ஆச்சரியம் அளிக்கவில்லை.
Also Read | செம்ம பேட்டரி பேக்கப்; Realme மாஸ் ஸ்மார்ட் வாட்ச் விரைவில் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR