அதிகமா வட்டி தரும் 4 வங்கிகள்; உங்க பேங்க் இதுல இருக்கா
சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதங்களை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதன்படி இந்த செய்தி தொகுப்பில் அதிக வட்டி வழங்கும் 4 அரசு வங்கிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
புதன்கிழமை, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, ரெப்போ விகிதம் தற்போது 4.90% ஆக உயர்ந்துள்ளது. இதற்கு பிறகு சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் சேமிப்புக் கணக்குகளின் விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற நான்கு அரசு வங்கிகள் சேமிப்புக் கணக்குகளில் சிறந்த வருமானத்தை அளிக்கின்றன என்பதை அறிவோம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக 3.55% வட்டியை வழங்குகிறது. வங்கியின் புதிய விகிதங்கள் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும். 50 லட்சம் வரை 2.75% வட்டியை வங்கி வழங்குகிறது. ரூ. 50 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ. 100 கோடி வரையிலான இருப்புக்கு 2.90% வட்டி வழங்குகிறது. ரூ.100 கோடி மற்றும் ரூ.500 கோடிக்கு மேல் இருப்பு வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குகளில் 3.10% கிடைக்கும். ரூ.500 கோடிக்கு குறைவாக இருந்தால் ரூ.1000 கோடிக்கு மேல் இருப்புக்கு 3.40% மற்றும் ரூ.1000 கோடிக்கு மேல் இருந்தால் 3.55% வட்டி கிடைக்கும்.
கனரா வங்கி
கனரா வங்கி தனது சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் 2.90% வட்டியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வங்கியின் புதிய விகிதங்கள் மார்ச் 1, 2022 முதல் அமலுக்கு வருகின்றன.
ரூ. 50 லட்சத்துக்கும் குறைவான இருப்பில் - 2.90%
ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல் ஆனால் ரூ. 100 கோடிக்கும் குறைவான இருப்பு - 2.90%
ரூ.100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மற்றும் ரூ.300 கோடிக்கும் குறைவாக இருப்பின்- 3.05%
ரூ.300 கோடி அல்லது அதற்கு மேல் ஆனால் ரூ.500 கோடிக்கு குறைவாக இருப்பின் - 3.05%
ரூ. 500 கோடி அல்லது அதற்கு மேல் ஆனால் ரூ. 1000 கோடிக்கும் குறைவாக இருப்பின் - 3.35%
ரூ. 1000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட கணக்கு இருப்பில் - 3.50%
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா 1 லட்சம் முதல் 100 கோடி ரூபாய் வரையிலான கணக்குகளுக்கு 2.75% வட்டி அளிக்கிறது. வங்கியின் புதிய விகிதங்கள் 25 பிப்ரவரி 2022 முதல் அமலுக்கு வருகின்றன.
ரூ. 1 லட்சம் வரையிலான கணக்கில் - 2.75%
ரூ. 1 லட்சம் முதல் ரூ 100 கோடி வரை - 2.75%
ரூ. 100 கோடிக்கு மேல் ஆனால் ரூ.200 கோடிக்கும் குறைவாக - 2.85%
ரூ. 200 கோடி அல்லது அதற்கு மேல் ஆனால் ரூ 500 கோடிக்கும் குறைவாக - 3.05%
ரூ. 500 கோடி அல்லது அதற்கு மேல் ஆனால் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாக - 3.25%
ரூ. 1000 கோடி அல்லது அதற்கு மேல் - 3.30%
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி
ரூ.10 கோடிக்கும் குறைவான கணக்கு இருப்புக்கு 3.00% வட்டியும், ரூ.10 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட கணக்கு இருப்புக்கு 3.20% வட்டியும் கிடைக்கும். அத்துடன் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சேமிப்புக் கணக்கில் 2.70% குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR