State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது

State Bank Vs Post Office RD: நீங்களும் சேமிக்க ஒரு நல்ல திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் அல்லது ஸ்டேட் வங்கியின் எந்த ரெக்கரிங் டெபாசிடுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்பதை இன்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2022, 11:36 AM IST
  • ரிஸ்க் இல்லாத முதலீட்டைத் தேர்ந்தெடுக்க ரெக்கரிங் டெபாசிட் திட்டம்
  • வங்கிகளில் 2.50 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரையில் வட்டி
  • RD இல் நல்ல வட்டியுடன், பணத்திற்கான உத்தரவாதமும் கிடைக்கும்
State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது title=

இப்போது உள்ள காலத்தில் அனைவருமே பணத்தை சேமித்து வைக்க நினைக்கின்றனர். பணத்தை சேமித்து வைப்பதற்கு நிறைய திட்டங்கள் இருக்கின்றன. சிறிய தொகையை தொடர்ச்சியாக சேமித்து அதிக லாபம் ஈட்டுவதற்கு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த திட்டமாக இருக்கும்.

ரிஸ்க் இல்லாத முதலீட்டைத் தேர்ந்தெடுக்க ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்ததாக இருக்கும். இதில் மாதத் தவணைகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். வெவ்வேறு வங்கிகளில் 2.50 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரையில் வட்டி உள்ளது. எனவே நீங்களும் சேமிக்க ஒரு நல்ல திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் அல்லது ஸ்டேட் வங்கியின் எந்த ரெக்கரிங் டெபாசிடுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்பதை இன்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Bank Holidays in June 2022: ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பதற்கான சிறந்த தேர்வாக ரெக்கரிங் டெபாசிட் கருதப்படுகிறது. ரெக்கரிங் டெபாசிட் கணக்கில், நல்ல வட்டியுடன், பணத்திற்கான உத்தரவாதமும் கிடைக்கும். அதன்படி நீங்கள் தபால் அலுவலகம் அல்லது எஸ்பிஐ வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கை திறக்க வேண்டுமானால் எங்கு வேண்டுமானாலும் திறக்கலாம். தபால் அலுவலகத்தின் ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் நீங்கள் அதிக பலன் பெறுவீர்களா அல்லது ஸ்டேட் வங்கியின் ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் அதிக பலன்களைப் பெறுவீர்களா என்பதை பார்ப்போம். 

போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட்- ரூ.100ல் தபால் நிலையத்தில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கை ஆரம்பிக்கலாம். இதில் பணம் டெபாசிட் செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை. மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் உங்கள் கணக்கு தொடங்கப்பட்டால், நீங்கள் அடுத்து வரும் மாதங்களில் 15 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திலும் கடன் பெறலாம், இந்த நேரத்தில் இதில் 5.8 சதவீத வட்டியின் பலனைப் பெறுகிறது.

ஸ்டேட் வங்கி ரெக்கரிங் டெபாசிட்- நீங்கள் ஸ்டேட் வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கைத் தொடங்கினால், பொது மக்கள் 5.25 சதவிகிதம் முதல் 7.25 சதவிகிதம் வரையிலான வட்டியைப் பெறுவார்கள். மேலும் ஸ்டேட் வங்கியில், 1 வருடம் முதல் 10 வருடங்கள் வரை ரெக்கரிங் டெபாசிட் கணக்கை திறக்கலாம். இது தவிர, நீங்கள் ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கு எதிராக கடன் பெற முடியும். அதேபோல் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு இந்தக் கணக்கைத் திறக்கலாம்.

மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News