Alert: அக்டோபர் 1 முதல் ‘இந்த’ விதிகளில் முக்கிய மாற்றம்
1 அக்டோபர் 2022: 4 நாட்களுக்குப் பிறகு புதிய மாதம் தொடங்க உள்ளது. அக்டோபர் 1 முதல், அரசாங்கத்தால் பல மாற்றங்கள் செய்யப்படும், இது உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்: இன்னும் 4 நாட்களுக்குப் பிறகு புதிய மாதம் தொடங்க உள்ளது. அக்டோபர் 1 முதல், அரசாங்கத்தால் பல மாற்றங்கள் செய்யப்படும், இது உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி சிறு சேமிப்பு திட்டத்தில் இருந்து கேஸ் சிலிண்டர் விலை வரை பல மாற்றங்கள் இதில் அடங்கும். எனவே 1 ஆம் தேதியில் இருந்து எந்தெந்த விதிகள் மாறப்போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்கும்
சிறு சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை மத்திய அரசால் பரிசீலிக்கப்படும். எனவே பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகியவற்றில் கிடைக்கும் வட்டித் தொகையை அரசாங்கம் விரைவில் அதிகரிக்கலாம். அதன்படி புதிய வட்டி விகிதங்களை மத்திய அரசு செப்டம்பர் 30 அன்று அறிவிக்கப்படலாம், மேலும் இது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவிருக்கும்.
டோக்கனைசேஷன் முறை அமல்படுத்தப்படும்
ஆர்பிஐ அக்டோபர் 1 முதல் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் (சிஓஎஃப் கார்டு டோக்கனைசேஷன்) விதிகளை அறிமுகப்படுத்துகிறது. டோக்கனைசேஷன் முறை மாற்றத்துக்குப் பிறகு, கார்டுதாரர்களுக்கு கூடுதல் வசதிகளும், பாதுகாப்பும் கிடைக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆன்லைன் வங்கி மோசடியைத் தடுப்பதே டோக்கனைசேஷன் முறையை அமல்படுத்தியதன் நோக்கமாகும்.
கேஸ் சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படலாம்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, கேஸ் சிலிண்டர்களின் விலைகள் மதிப்பாய்வு செய்யப்படும். அந்த வகையில் இம்முறை எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீமேட் கணக்கு விதிகளில் மாற்றம் வரும்
நீங்களும் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்தால், செப்டம்பர் 30 முதல், விதிகளில் பெரிய மாற்றம் வரப் போகிறது. டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30, 2022க்குள் இரண்டு காரணி அங்கீகாரத்தை முடிக்க வேண்டும், அதன் பிறகுதான் உங்கள் கணக்கில் லாகின் செய்ய முடியும். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், உங்கள் கணக்கு திறக்கப்படாமல் போகலாம்.
அடல் பென்ஷன் யோஜனா விதிகளில் மாற்றம் இருக்கும்
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வரி செலுத்தும் வாடிக்கையாளர்கள் அடல் பென்ஷன் யோஜனாவைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. தற்போதைய விதிகளைப் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | குழந்தைகளின் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் மாதம் ரூ.2500 வருமானம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ