ATM டிரான்ஸாக்ஷன்களின் கட்டணங்கள் உயர்வு.. வங்கிகள் அதிரடி!

வங்கிகள் நிர்ணயித்திருக்கும் இலவச டிரான்ஸாக்ஷன்களின் வரம்பை தவிர்த்து அதற்கு மேல் டிரான்ஸாக்ஷன் செய்யும் வாடிக்கையாளரின் ஒரு டிரான்ஸாக்ஷனுக்கும்  ரூ.21 வசூலிக்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 10, 2022, 08:21 AM IST
  • வரம்பை தவிர்த்து அதற்கு மேல் டிரான்ஸாக்ஷனுக்கு ரூ.21 வசூலிக்கப்படுகிறது.
  • ஏடிஎம்-லிருந்து ஒவ்வொரு மாதமும் 5 தடவை இலவசமாக டிரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம்.
  • வங்கி கணக்கில் பணம் இல்லையென்றால் ரூ.20 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
ATM டிரான்ஸாக்ஷன்களின் கட்டணங்கள் உயர்வு.. வங்கிகள் அதிரடி! title=

ஏடிஎம் மூலம் ட்ரான்ஸாக்ஷன் செய்துகொள்வது மக்களுக்கு சௌகரியமான ஒன்றாக இருந்து வருகிறது, எந்த ஏடிஎம் மையங்களிலும், எந்த நேரத்திலும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நமது வங்கி கணக்கிலுள்ள பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.  பொதுவாக வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு நாட்கள் என இலவச டிரான்ஸாக்ஷன்களை வழங்குகிறது, அந்த இலவச டிரான்ஸாக்ஷன்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பிறகு அவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.   இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, ஜனவரி 1, 2022 முதல் வங்கிகள் நிர்ணயித்திருக்கும் இலவச டிரான்ஸாக்ஷன்களின் வரம்பை தவிர்த்து அதற்கு மேல் டிரான்ஸாக்ஷன் செய்யும் வாடிக்கையாளரின் ஒரு டிரான்ஸாக்ஷனுக்கும்  ரூ.21 வசூலிக்கப்படுகிறது, இதற்கு முன்னர் வங்கிகள் ஒரு டிரான்ஸாக்ஷனுக்கு ரூ.20 வசூல் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | 10 வினாடிகளில் தனிநபர் கடன் வழங்கும் HDFC வங்கி! விண்ணப்பிக்க வழிமுறைகள்!

ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் சொந்த ஏடிஎம்-லிருந்து  ஒவ்வொரு மாதமும் 5 தடவை இலவசமாக டிரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம்.  அதேபோல மற்ற வங்கி கிளைகளின் ஏடிஎம்-ல் ஒரு மாதத்திற்கு 3 தடவை இலவசமாக ட்ரான்ஸாக்ஷன்கள் செய்து கொள்ளலாம், அதுவே பெரிய நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் 5 தடவை இலவசமாக ட்ரான்ஸாக்ஷன்கள் செய்து கொள்ளலாம்.  இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளை ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கு ரூ.17 மற்றும் நிதி அல்லாத ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.6 டிரான்ஸாக்ஷன் கட்டணமாக வசூலிக்க அறிவுறுத்தியது.  இப்போது எந்தெந்த வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பார்ப்போம். 

Difference between ATM Cards and Debit Cards

எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-ல் மற்ற கார்டுதாரர்கள் பணத்தை எடுத்தால் ரூ.20 + ஜிஎஸ்டி மற்றும் 10 + ஜிஎஸ்டி வசூலிக்கும், மற்ற பயனர்கள் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.8+ஜிஎஸ்டி மற்றும் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து ரூ.5+ஜிஎஸ்டி வசூலிக்கும்.  மேலும் வங்கி கணக்கில் பணம் இல்லையென்றால் ரூ.20 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.  மற்ற வங்கி ஏடிஎம் பயன்படுத்தி ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம்-ல்ஒருவர் ரூ.10,000 மட்டுமே எடுக்கமுடியும், இலவச டிரான்ஸாக்ஷனுக்கு பிறகு செய்யப்படும் ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனுக்கும் கட்டணம் ரூ.21 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.8.50 வசூலிக்கப்படும்.

அடுத்ததாக மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்மில் ரூ.10000 வரை எடுக்க முடியும்.  இலவச டிரான்ஸாக்ஷனுக்கு மேல் பணம் எடுத்தால் ரூ 21 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ 8.50 + ஜிஎஸ்டி வசூலிக்கும்.  அதேபோல ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்-ல் மற்ற வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ.10000 எடுக்கலாம்.  இலவச ட்ரான்க்ஷனுக்கு மேல் பணம் எடுக்கபட்சத்தில் கட்டணமாக ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க | NRI Remittances மற்றும் கிரெடிட் வளர்ச்சியில் அதிகரிப்பை காணும் பெடெரல் வங்கி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News