How to Sell Rare 2 Rupee Note: பழங்கால ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Antique Collection) சேகரித்து வைத்திருக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு, அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.  ஓல்டு இஸ் கோல்டு  என்ற பழமொழி ஒன்று உண்டு. அதனை மெய்பிக்கும் விதமாக பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மூலம் லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். பழங்கால பொருட்களுக்கும் நல்ல மதிப்பு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு (Central Government) பல ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்தியுள்ளது. இந்த நோட்டுகளில் 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அடங்கும். இவற்றில், அரிய  பழைய நோட்டுகள்  பல ஆன்லைன் தளங்களில் ஏலம் விடப்படுகின்றன. இந்த பழைய நோட்டுகளை வாங்க பலர் அர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இதற்கு அதிக டிமாண்ட் உள்ளது. சில ஆன்லைன் தளங்கள் இந்த ரூபாய் நோட்டுக்களை விற்க உதவுகின்றன. இதில் இந்திய ரயில்வேயின் (Indian Railway) 200 ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 2003ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டும் அடங்கும். இது போன்று 786 எண்ணுடன் முடிவையும் நோட்டுக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். ஏனெனில், 786 எண் இஸ்லாமியர்கள் மத்தியில் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது. 


மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கறீங்களா... ‘இந்த’ கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையா இருங்க!


ஓஎல்எக்ஸ் அல்லது காயின் பஜார் தளங்களில் விற்கலாம்


ஒரு வேளை இந்த நோட்டுகள் உங்களிடம் இருந்தால், அதனை ஓ எல் எக்ஸ் ( OLX) அல்லது காயின் பஜாரில் (Coin Bazaar) விற்றுக் கொள்ளலாம். இதற்காக OLX அல்லது காயின் பஜாரில் தளத்தில் ஒரு கணக்கினை தொடங்கிக் கொள்ளுங்கள். கணக்கினை உருவாக்கிய பிறகு ரூபாயின் நோட்டின் முன் பக்கம், பின் பக்கத்தினை தெளிவாக புகைபடம் எடுத்து அதனை பதிவிடுங்கள். இதன் மூலம் உங்கள் பழைய அரிய ரூபாயை வாங்க நினைப்பவர்கள் உங்களை தொடர்பு கொண்டு வாங்குவார்கள்


ரூபாய் நோட்டை விற்க செய்ய வேண்டியவை (How to Sell Rare Notes and Coins)


அரிய ரூபாய் நோட்டுக்களையும் அரிய காயின்களையும் விற்க, உங்களுக்கு கணக்கை உருவாக்கும் போது சரியான விவரங்களை கொடுக்கவும். உங்களது மொபைல் எண், ஈ மெயில் முகவரி, உள்ளிட்ட்ட விவரங்களை சரியாக பதிவிடவும். இதன் மூலம் தேவையிருப்பவர்கள் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். இதன் மூலம் உங்கள் அரிய பழைய ரூபாய் நோட்டுக்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். இதற்காக வேறு சில பிரத்யேகமான சில தளங்களும் உள்ளன. அவற்றிலும் நீங்கள் உங்கள் கணக்கினை தொடங்கி, அரிய ரூபாய் நோட்டின் புகைப்படத்தை எடுத்து தகவல்களை பதிவிடலாம். இதன் மூலம் பழைய ரூபாய் நோட்டுகள், காயின்களை விற்பனை செய்து கொள்ளலாம்.


(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)


மேலும் படிக்க | NEPAL: நேபாளத்தை சுத்திப் பார்க்க போலாமா? பேக்கேஜ் விலையும் குறைவு வசதிகளும் அதிகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ