Tips for making money: சேமிப்பு என்பது நமது வாழ்வின் மிக தேவையான ஒரு அம்சமாகும். சிறு துளி பெரு வெள்ளம் என நம் முன்னோர்கள் கூறியிருப்பது மிகப்பெரிய உண்மை. சேமிப்பு, முதலீடு ஆகிய பழக்கங்களை வாழ்க்கையில் கொண்டுள்ளவர்கள் எப்போதும் வெற்றி பெற்றுள்ளார்கள். எதிர்பாராமல் வரும் செலவுகளின் போதுதான் சேமிப்பின் அருமை பலருக்கு புரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், நம்மில் பலரிடம் சேமிப்பு பற்றிய தவறான கருத்து ஒன்று உள்ளது. அதிகமாக பணம் சம்பாதிப்பவர்கள்தான் சேமிப்பில், முதலீட்டில் இறங்க முடியும் என பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான ஒரு கருத்து. ஒரு மாதத்துக்கு 5000 ரூபாய் சம்பாதிப்பவராக இருதாலும் சரி 5 லட்சம் சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி, அனைவரும் பசித்தால் உண்கிறோம், இரவில் உறங்குகிறோம். அவரவரது வசதிக்கேற்ப, உண்ணும் உணவும், படுக்கும் இடமும் மாறுபடலாம். ஆனால், உணவும் உறக்கமும் அனைவருக்கும் ஒன்றுதான். அதேபோல், பணத்தை சேமிப்பதும், முதலீடு செய்வதும் அனைவருக்கும் ஏற்றது.


எதிர்கால நலனிற்காக ஒருவர் முதலீடு (Investment) செய்ய நினைத்தால், அதற்காக அவரிடம் மிக அதிக தொகை இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. சரியான முறையில் திட்டமிட்டு, நம் வருமானத்தில் ஒரு சிறிய அளவை முதலீடு செய்தால் கூட, அது சில ஆண்டுகளில் நம்மை ஒரு பெரிய தொகைக்கு அதிபதியாக்கும். ஆம்!! சந்தையில் சிறிய அளவில் முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் காணவல்ல பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் பற்றிய புரிதலும், திட்டமிடலும் மட்டுமே இருந்தால் போதும், நாமும் சில ஆண்டுகளில் லட்சாதிபதியாக, கோடீஸ்வரராக மாறிவிடலாம். வீடு, கார் வாங்க, குழந்தைகளின் படிப்பு, திருமண செலவு, ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியான வாழ்க்கை என உங்கள் மனதில் பாரமாய் தோன்றும் அனைத்து விஷயங்களுக்கும், முதலீடு என்ற மூல மந்திரமே உங்களுக்கு கை கொடுக்கும்.


பொதுவாக, முதலீடு என்ற வார்த்தையைக் கேட்டாலே, அது நடுத்தர வயதினருக்கானது என பலர் நினைப்பதுண்டு. இளைஞர்கள் அதைப் பற்றி யோசிப்பது கூட இல்லை. ஆனால், இளமையில் கல் என்பது போல, இள வயதிலேயே முதலீட்டை துவக்குவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார்கள் நிபுணர்கள். எவ்வளவு விரைவாக நாம் நம் முதலீட்டு செயல்முறைகளை துவக்குகிறோமோ அவ்வளவு விரைவாக நாம் நம் இலக்கை அடைய முடியும்.


சரி, முதலீடு செய்வது என முடிவெடுத்த பிறகு, எங்கு முதலீடு செய்வது (Where to invest) என்ற மிகப்பெரிய கேள்வி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் உள்ள நிதி நிலைமைகளை ஆராய்ந்து பொருளாதார நிபுணர்கள் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பான முதலீட்டு அறிவுறை மியுச்சுவல் ஃபண்டுகள் (Mutual Fund) ஆகும். 


மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?


மாதா மாதம் ஒரு தொகையை செலுத்தி அதன் மூலம் லாபம் காண விருப்பம் கொண்டவர்கள், அந்த தொகையை ஒரு அமைப்பிடம் கொடுப்பார்கள். அந்த அமைப்புகள், பங்குச் சந்தையில் உள்ள பங்குகள் (Equity, Shares), கடன் பத்திரங்கள் (Debt Funds) ஆகியவற்றில் இந்த தொகையை முதலீடு செய்வார்கள். எது நல்ல முதலீடு, எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும், எதில் முதலீடு செய்தால் ஆபத்து குறைவு, எதில் நம் பணத்துக்கு பாதுகாப்பு உள்ளது என இப்படி பல விதங்களான விவரங்களை தெரிந்துள்ள, அனுபவமிக்க நபர்கள் இந்த அமைப்புகளில் முதலீட்டாளர்களின் தொகையை பிரித்து முதலீடு செய்வார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அமைப்பு, லாப நஷ்ட கணக்கைப் பார்த்து, அதன் படி வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும்.


எப்படி முதலீடு செய்வது?


மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மிகவும் எளிதான ஒரு செயல்முறையாகும். எந்த வயதினரும் இதில் SIP (Systematic Investment Plan)-ல் முதலீடு செய்யலாம். எனினும், சிறிய வயதில் முதலீடு செய்தால், விரைவாக அதிக லாபத்தைக் காண முடியும். SIP மூலம் எந்த ஒரு பன்முகப்படுத்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்டிலும் (Diversified Mutual Fund) நாம் முதலீடு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 500 ரூபாய் என்ற சிறிய அளவிலிருந்து முதலீடு செய்யத் துவங்கலாம். அதாவது,  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நம்மிடம் பெரிய தொகை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.


ALSO READ: போலி 500 ரூபாய் நோட்டை எவ்வாறு கண்டறிவது என்பதை இங்கே காண்க


SIP என்றால் என்ன?


முறைப்படுத்தப்பட்டமுதலீட்டு திட்டம் அதாவது SIP என்பது மக்கள் முதலீடு செய்யும் ஒரு பயன்முறையாகும். இதன் மூலம், தனி நபர் சிறிது சிறிதாக, சீராக, தங்கள் வசதிக்கு ஏற்ப முதலீடு செய்ய முடியும். SIP-ஐ மூன்று வகையில் துவக்கலாம்:


முதல் வகை: மியூச்சுவல் ஃபண்ட் முகவர் மூலமாக
இரண்டாம் வகை: முகவர் மூலமாக ஆன்லைனில் டிரேடிங் கணக்கை (Trading Account) SIP முதலீட்டைத் துவக்கலாம். 
மூன்றாவது முறை:  மியூச்சுவல் ஃபண்டடின் நேரடி திட்டங்களில் (Direct Plans) முதலீடு செய்யலாம். இப்படி செய்ய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் வலைத்தளத்தில் சென்று முதலீடு செய்ய வேண்டும்.


 மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாமப் காண சில டிப்ஸ்:


 மியூச்சுவல் ஃபண்டில் மூலம் பெரிதாக லாபம் காண எண்ணினால், நீங்கள் சில முக்கிய குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும். முதலில், நீங்கள் செய்யும் முதலீட்டை விடாமல் மாதா மாதம் செய்ய வேண்டும். உங்கள் வருவாய் அதிகரிக்கும்போதெல்லாம், முதலீட்டின் அளவையும் நீங்கள் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு 25 வயது இளைஞன்  மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 500 ரூபாய் என முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் கண்டிப்பாக ஒவ்வொரு 6 மாதங்களிலும் தன் முதலீட்டில் குறைந்தபட்சமாக 500 ரூபாயை அதிகரிக்க வேண்டும்.


இப்படி செய்தால், 5 ஆண்டுகளில், அதாவது அவருக்கு 30 வயதாகும் போது, அவர் முதலீடு (Investment) செய்யும் தொகை மாதம் 5000 ரூபாய் என்றாகிவிடும். முதலீடு செய்யும் தொகையின் அளவை அதிகரிப்பது முடியாது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இது சாத்தியமே. நமது வருவாய் அதிகரிக்க அதிகரிக அதற்கேற்றாற்போல நம் முதலீடையும் நாம் கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், முதல் இரண்டு ஆண்டுகளில் நாம் முதல்லீடு செய்துள்ள தொகையின் அளவைக் கண்டால், முதலீடு குறித்த ஆர்வம் முதலீட்டாளருக்கு அதிகமாகும். அதுவே அவரை அதிக அளவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும். 


ALSO READ: இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR