Mutual Fund முதலீட்டாளர்களுக்கு முக்கிய செய்தி: இன்று முதல் இந்த முக்கிய மாற்றம்!!

புதிய விதி தொடர்பான செய்திகள் எஸ்எம்எஸ் மற்றும் பிற வழிகளில் முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. புதிய விதிக்குப் பிறகு, முதலீட்டாளர்களுக்கு இப்போது அந்த நாளின் NAV கிடைக்க அதிக நேரம் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2020, 05:46 PM IST
  • SEBI, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் நேரத்தை மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு மாற்றியுள்ளது.
  • SEBI, liquid மற்றும் overnight fund-களை வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் நேரத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
  • நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (2020-21) பங்குச் சந்தையில் ரூ .39,500 கோடி முதலீடு செய்யப்பட்டது.
Mutual Fund முதலீட்டாளர்களுக்கு முக்கிய செய்தி: இன்று முதல் இந்த முக்கிய மாற்றம்!! title=

மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Fund) முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. சந்தை கட்டுப்பாட்டாளரான SEBI, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் நேரத்தை மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு மாற்றியுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும். இதனால் மியூச்சுவல் ஃபண்டு வாங்கி விற்கும் முதலீட்டாளர்களுக்கு அவற்றை வாங்கவும் விற்கவும் அதிக நேரம் கிடைக்கும்.

ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், Debt Mutual Fund Schemes மற்றும் Conservative Hybrid Fund ஆகியவற்றை வாங்கும் மற்றும் விற்கும் நேரத்தில் SEBI எந்த மாற்றமும் செய்யவில்லை. மியூசுவல் ஃப்ண்டுகளை ஒழுங்குபடுத்தும் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சங்கத்தின் (AMFI) தலைவர் நிலேஷ் ஷாவும் SEBI-யின் இந்த புதிய முடிவு குறித்து எற்கனவே ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ: ரயில்வே அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்.. லட்சக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பு..!!!

இந்த புதிய விதி தொடர்பான செய்திகள் எஸ்எம்எஸ் மற்றும் பிற வழிகளில் முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. புதிய விதிக்குப் பிறகு, முதலீட்டாளர்களுக்கு இப்போது அந்த நாளின் NAV கிடைக்க அதிக நேரம் கிடைக்கும்.

SEBI, liquid மற்றும் overnight fund-களை வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் நேரத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது முன்பு போல 12.30 முதல் 1.30 வரை தான் இருக்கும்.  Debt மற்றும் Conservative Fund-களுக்கு இது மதியம் 1 மணி வரை உள்ளது.

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு பற்றி பேசினால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (2020-21) பங்குச் சந்தையில் ரூ .39,500 கோடி முதலீடு செய்யப்பட்டது. சிறப்பு என்னவென்றால், கொரோனா காலத்திலும் கூட இதில் முதலீட்டாளர்கள் உறுதியாக இருந்தனர். இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இருந்ததை விட சுமார் நான்கு மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: வங்கியில் தங்கம், வருமானம் தினம் தினம்: SBI-ன் Revamped Gold Deposit Scheme: விவரம் உள்ளே!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News