ஓய்வு என்பது உங்கள் வாழ்நாள் கனவுகளை நிதானமாக நிறைவேற்றுவதற்கான நேரம். இருப்பினும், ஓய்வுக்குப் பிறகு அதிக மருத்துவச் செலவுகள் உங்கள் வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கும். பணி ஓய்வுக்குப் பிறகு நிறுவனத்தின் காப்பீடு கிடைக்காது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை எடுக்க, அதிக அளவில் ப்ரீமியம் கட்ட வேண்டும். தவிர, OPD, X-ray, இரத்தப் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை ஆகியவை உங்கள் பாக்கெட்டை காலி செய்து விடும். மருத்துவ கட்டணங்கள், சிகிச்சைக்கான கட்டணங்கள், பரிசோதனை கட்டணங்கள் என அனைத்தும் அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளில் சுகாதார சேவைகள் வேகமாக வளரும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். திட்டமிடல் மற்றும் பட்ஜெட்டை சரியாகச் செய்வதன் மூலம் உங்கள் செலவுகளைக் குறைக்கலாம். இல்லையெனில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும் சேமிப்பும் மருத்துவக் கட்டணங்களுக்குச் செல்லும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகரிக்கும் OPD செலவுகள்


வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது ஆகியவை ஓய்வு காலத்தில் (Retirement Plans) மிகவும் செலவு வைக்கும் விஷயம் ஆகிறத். மேலும், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகளின் விலைகள் பல்வேறு காரணங்களுக்கான மிக அதிகம் உள்ளன. எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை, எம்ஆர்ஐ போன்ற வழக்கமான சோதனைகள் உங்கள் OPD செலவுகளை அதிகரிக்கின்றன. நீங்கள் சேமித்த பணம் இதில் கரைந்து செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. இது தவிர, பல் பராமரிப்பு, பார்வை பராமரிப்பு போன்ற பல செலவுகளும் உங்கள் உடல் நலக் காப்பீட்டில் பொதுவாக இருக்காது. இதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். அதனால் பின்னர் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தப்பிக்கலாம்.


ஓய்வுக்குப் பிறகு OPD செலவுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுங்கள்


உங்கள் ஓய்வுக்குப் பிறகு, OPD செலவுகளை உள்ளடக்கிய நிதி பட்ஜெட்டை உருவாக்கவும். இந்தச் செலவுகளுக்குப் பணம் ஒதுக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஓய்வுக்குப் பிறகு, இந்த பட்ஜெட் உங்கள் OPD செலவுகளைச் சந்திக்க உதவும். உடல் நலப் பாதுகாப்புச் செலவினங்களுக்காக பட்ஜெட் போடாமல் இருப்பது உங்கள் ஓய்வூதியச் சேமிப்பில் பெரும் பகுதியை கரைத்து விடும். பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தால், உங்கள் மருத்துவ செலவுகள் அதிகமாகும் என்பதால், உங்கள் சேமிப்பு விரைவில் தீர்ந்துவிடும். உங்களுக்கென ஒரு சுகாதார சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இது உங்களுக்கு ஆரோக்கியத்தை காக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். இது OPD செலவினங்களைச் சந்திக்க உதவும். சுகாதார பராமரிப்பு அமைப்பு உங்களுக்கு OPD கவரேஜையும் வழங்குகிறது.


மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? வரம்பை மீறினால் வருமான வரி நோட்டீஸ்


OPD செலவுகளை உள்ளடக்கும் ஒரு சுகாதார திட்டத்தை எடுங்கள்


உடல் நல காப்பீட்டு திட்டத்தை தேர்ந்து எடுக்கும் போது, ​​OPD செலவுகளை உள்ளடக்கிய ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மருத்துவர் ஆலோசனைகள், நோயறிதல் சோதனைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை இருக்க வேண்டும். ஏனெனில் இவை ஓய்வுக்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியமானவை. பல் மற்றும் கண்களுக்கு தனித்தனி கவரேஜ் கிடைக்கும் வகையிலான காப்பீட்டை தேர்வு செய்யவும். ஏனெனில், பல் பிரச்சனை, கண் புரை போன்ற கண் நோய்கள் ஆகியவை வயதானால் ஏற்படும் பொதுவான பாதிப்புகள் ஆகும். இவற்றிற்கு சிகிச்ச்சை அளிக்க நிறைய பணம் செலவாகும். ஓய்வுக்குப் பிறகு, உடல்நலம் மற்றும் சுகாதாரச் செலவுகளைப் பற்றி சரியாகத் திட்டமிடுவது அவசியம்.


மேலும் படிக்க | TNEB: மழை வெள்ள பாதிப்பினால் மின் கட்டணம் செலுத்தும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ