சென்னை: எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGA) பணிபுரிந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2,696.77 கோடி ரூபாய் நிலுவைத்தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக நேற்று (2023, அக்டோபர் 26) கடிதம் எழுதிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான முக்கியமான திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டம் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்பை வழங்குவதோடு, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்திட ஏதுவான நீடித்த மற்றும் நிலையான கிராமப்புற சொத்துக்களை உருவாக்கிடும். கிராமப்புற மக்களின் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்திடும் ஒரே திட்டம் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினைச் செயல்படுத்துவதில், தமிழகம் எப்போதும் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது என்பதை குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் 92.86 லட்சம் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் பணியாற்ற பணி அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும், 76.15 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 91.52 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | அகவிலைப்படி 50% அல்ல, 51% ஆக உயரும்: ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு


கிராமப்புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் என அடிமட்ட மக்களுக்கு முக்கியமானதொரு வாழ்வாதாரமாக இருக்கிறது. அதிலும் விவசாயம் நலிவடைந்த பருவத்தில், கிராமப்புறங்களில் பலருக்கு கூடுதல் வாழ்வாதார வாய்ப்பாகவும் கருதப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதாலும், அவர்களின் நிதிநிலை மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் மேம்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் தனது கடிதத்தில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்..


தமிழகத்தில், 2023-2024 ஆம் ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 28 கோடி மனித நாட்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 23-10-2023 வரை, 66.26 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம், தமிழகம் 31.15 கோடி மனித நாட்களை எட்டியுள்ளது.


2023-2024 நிதியாண்டில், 19-7-2023 வரை, தொழிலாளர்களுக்கு திறன்சாரா ஊதியத்துக்காக ரூ.4,903.25 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 25-9-2023 அன்று 1,755.43 கோடி ரூபாய், திறன்சாரா ஊதியம் வழங்குவதற்காக மத்திய அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும் அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு! போனில் பேசி தீர்வு காணும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


எஞ்சிய ரூ.1,337.20 கோடி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதோடு, அதற்குப்பிறகான வாரங்களுக்கான ஊதியத்துக்கான ரூ.1,359.57 கோடி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை. 20-10-2023 நிலவரப்படி, தமிழகத்தில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை ரூ.2,696.77 கோடி ஆகும்.


"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 17-10-2023 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு நான் ஆய்வுப் பயணம் மேற்கொண்டேன். அப்போது, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டுமென்று பொது மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இதேபோன்ற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போதும் எனக்கு வந்தது.


எனவே, மேற்குறிப்பிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர், திறன்சாரா தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக்கப்பட வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் அடுத்த அதிரடி அறிவிப்பு: 50% அகவிலைப்படி, ஊதிய ஏற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ



தமிழ்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு,