Gold Price Today 9th September 2020: தங்கம் மற்றும் வெள்ளியின் ஸ்பாட் விலையில் இன்று மாற்றங்கள் காணப்பட்டன. புதன்கிழமை, நாடு முழுவதும் உள்ள தங்க சந்தைகளில், 24 காரட் தங்கத்தின் விலை காலையில் ஒரு வேகத்தை கண்டது, ஆனால் அது மாலைக்குள் விலை குறைந்தது. இன்று, 10 கிராம் தங்கம் ரூ .268 அதிகரித்து ரூ .51,343 ஆக இருந்தது. அதுவே நேற்று ரூ .24 குறைந்து மாலை 51,051 ரூபாயாக முடிவடைந்தது. அதே நேரத்தில், வெள்ளியின் விலை ரூ .127 அதிகரித்து ரூ .64952 ஆக இருந்தது. நேற்று மாலையில் அதன் விலை குறைந்தது. அதாவது வெள்ளி (Silver Rate) ஒரு கிலோவுக்கு ரூ .278 குறைந்து ரூ .64,547 ஆக இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பர் 9, 2020 அன்று இந்தியா புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் வலைத்தளத்தின்படி (ibjarates.com), நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி (Gold and Silver Rate) விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏறக்குறை இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்துக்கொண்டே வந்தது. ஆனால் நேற்று காலை சற்று விலை உயர்ந்தது. பின்னர் மாலை விலை குறைந்தது.


ALSO READ |  


Gold Rate: தங்கத்தின் விலை 3 நாளாக குறைந்துள்ளது; தமிழகத்தில் எவ்வளவு?


Gold ETF: தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற அருமையான Tips!!


அதபோல சென்னையில் (Gold Rate In Chennai) நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 4,909 -க்கு விற்பனையானது. இன்று கிராமிற்கு 16 ரூபாய் உயர்ந்து ரூ. 4925-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


24 கேரட் தங்கத்தின் (24 Carat Gold Rate) விளையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 24K தங்கத்தின் விலையானது ரூ. 5,154-க்கு விற்பனையானது. அதுவே இன்று ஒரு கிராமிற்கு 17 ரூபாய் உயர்ந்து ரூ. 5,171-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


தற்போதைய தங்க-வெள்ளி விலை வெவ்வேறு இடங்களில் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் விலையில் சிறிதளவு மட்டுமே வித்தியாசம் இருக்கும்.