புதுடெல்லி: தேசிய தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை (October 1) தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .37 அதிகரித்து ரூ .51,389 ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய வர்த்தகத்தில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .51,352  என்ற அளவில் இருந்தது. ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ள போதிலும், தங்கத்தின் விலை 37 ரூபாய் அதிகரித்தது.


மறுபுறம், வெள்ளி விலை முந்தைய வர்த்தகத்தில் ஒரு கிலோவுக்கு 62,338 ரூபாயிலிருந்து 915 குறைந்து ஒரு கிலோவுக்கு ரூ .61,423 ஆக இருந்தது.


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4825 ரூபாயாக உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 38,600 ஆக உள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5264 ஆக உள்ளது. 


தில்லியில் 24 காரட்  தங்கத்தின் விலை 37 ரூபாய் உயர்ந்துள்ளது.


உள்நாட்டு பங்குகள் மதிப்பு அதிகரித்தல் மற்றும்  அமெரிக்க டாலர் பலவீனமடைந்ததால், முதலீட்டாளர்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது ரூபாயின் மதிப்பு 63 காசுகள் அதிகரித்து வியாழக்கிழமை ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, ரூ. 73.13  ஆக இருந்தது.


சர்வதேச சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,895 அமெரிக்க டாலர்களாகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 23.60 அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.


அமெரிக்காவின் சிறிது நிச்சயமற்ற தன்மை மற்றும் டாலர் மதிப்பில் உள்ல ஏற்ற இறக்கங்கள் ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை வியாழக்கிழமை  அதிகரித்து, அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.


மேலும் படிக்க | Driving licence எடுத்துச் செல்வது இனி கட்டாயமில்லை. அக்டோபர் முதல் புதிய மோட்டார் வாகன விதிகள்...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR