கடந்த 1 வருடத்தில் எதிர்பாராத அளவு அதிக வருமானத்தை அளித்துள்ள பங்குகளில் சில இன்ஃப்ரா எனப்படும் கட்டமைப்புத்துறையை சேர்ந்த நிறுவனத்தின் பங்குகளும் இடம் பெற்றுள்ளன. உள்கட்டமைப்புத் துறையின் பங்குகள் கடந்த ஓராண்டில் அதிக வருமானத்தை அளித்துள்ளன. நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் மும்முரமாக உள்ள நிலையில் புதிய விரைவுச் சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், விமான நிலையங்கள் என உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்கட்டமைப்புத்துறை பங்குகளில் சுமார் 17 நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் மல்டிபேக்கர்களாக மாறியுள்ளதாக பிஎஸ்இ இந்தியா மதிப்பு ஆராய்ச்சி தரவுகள் தெரிவிக்கின்றன. 


ஓராண்டு காலத்தில் அதிக வருமானம் ஈட்டிய இன்ஃப்ரா பங்குகளில் சில...


மேலும் படிக்க | தொடர்ந்து ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!


இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்
ஓராண்டில் 431.52 சதவீத லாபத்தை அளித்துள்ள இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ. 2,30,201.73 கோடி சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்படி ரூ.176.15  மதிப்பு உள்ள பங்காக அதன் பங்குகள் உள்ளன.
 
NBCC இந்தியா

பொதுத்துறை நிறுவனமான NBCC இந்தியா கடந்த ஓராண்டில் 276.85 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,179.00 கோடி, அதன் பங்கின் விலை ரூ.156.55.


REC Ltd 
பொதுத்துறை நிறுவனமான REC Ltd பங்கு ஒரு வருடத்தில் 242.57 சதவீத லாபத்தை அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,34,557.75 கோடி,  பங்கின் விலை ரூ.511.00.


ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் 
மல்டிபேக்கர் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஒரு வருட காலத்தில் 210.90 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.81,201.11 கோடி, அதன் பங்கின் விலை ரூ.389.45.


பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் 
பொதுத்துறை நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஒரு வருட காலத்தில் 206.02 சதவீத லாபத்தை அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,60,566.45 கோடி, பங்கு விலை 486.55.


மேலும் படிக்க | Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?


அதானி பவர் 
அதானி குழும நிறுவனமான அதானி பவர் லிமிடெட், ஓராண்டு காலத்தில் 176.19 சதவீத லாபத்தை அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,94,188.02 கோடியாகும், செவ்வாய்கிழமையன்று வர்த்தக முடிவில் அதானி பவர் நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.762.75 என்ற அளவிலிருந்தது. 


NCC
கட்டுமான நிறுவனப் பங்குகள் ஒரு ஆண்டுக் காலத்தில் 170 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளன. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.20,439.55 கோடி, பங்கு மதிப்பு ரூ.325.55 ஆக இருந்தது.


ஆயில் இந்தியா 
மல்டிபேக்கர் பங்கான ஆயில் இந்தியா, ஒரு வருடத்தில் 153.39 சதவீத லாபத்தை அளித்துள்ளது. எண்ணெய் மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான OMC ரூ.70,350.79 கோடி சந்தை மதிப்புடன், பங்கு விலை ரூ.648.75 என்ற அளவில் இருக்கிறது.  


JSW எனர்ஜி 
ஜிண்டால் குழுமத்தின் மின் உற்பத்தி ஓராண்டில் 144.07 சதவீத லாபத்தை அளித்துள்ளது. லார்ஜ் கேப் நிறுவனமான JSW எனர்ஜி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,11,297.89 கோடி, அதன் பங்கின் விலை ரூ.636.80.
 
IRB இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்
ஓராண்டு காலத்தில் 136.57 சதவீத லாபத்தை அளித்துள்ள IRB இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.39,941.95 கோடியாகவும், பங்கு விலை ரூ.66.14 ஆகவும் உள்ளது.


மேலும் படிக்க | Chandrababu Naidu: 12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த நிகர மதிப்பு... கோடீஸ்வரரான 9 வயது பேரன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ