Union Budget 2024-25: பிப்ரவரி 1, 2024 அன்று, மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இப்போது புதிய அரசாங்கம் 2024-25-க்கான முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும், 2024 ஜூலை 1 ஆம் தேதி அரசாங்கம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 1 ஆம் தேதி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்றாவது ஆட்சிக்காலத்தில் தனது உதல் பட்ஜெட்டில் எண்டிஏ அரசாங்கத்திடமிருந்து பல முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு
முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என எமது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் ஜூலை 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 18வது மக்களவைக்கு மக்களவை சபாநாயகர் ஜூன் 26ம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்றும், ஜூன் 27ம் தேதி அவையில் குடியரசுத் தலைவர் உரையாற்றக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8.2 சதவீத வலுவான ஜிடிபி வளர்ச்சி
மோடி 3.0 அரசாங்கத்தில், நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களின் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிறுவன நிர்வாகத்தின் நிர்வாகத்தில் சிறந்த எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது, அவரது வெற்றிகரமான சாதனையை அடிப்படையாகக் கொண்டது. இந்தியப் பொருளாதாரம் 2023-24ல் 8.2 சதவீத ஜிடிபி வளர்ச்சியை எட்டியுள்ளது. உலகின் முக்கிய பொருளாதாரங்களில் இதுவே மிக வேகமானது. மேலும், பணவீக்க விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
முன்பை விட பொருளாதாரம் வலுவாக உள்ளது
நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்ற போது, 2020-21ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதமாக இருந்த நிதிப்பற்றாக்குறை 2024-25ல் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் முன்பை விட வலுப்பெற்றுள்ளதை உணர முடிகின்றது. நாட்டின் மேம்பட்ட நிதி நிலை மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சியைக் காரணம் காட்டி, S&P குளோபல் ரேட்டிங்ஸ் இந்தியாவின் சோவரின் மதிப்பீட்டுக் கண்ணோட்டத்தை 'ஸ்டேபி:’ என்பதில் இருந்து 'பாசிட்டிவ்' என உயர்த்தியுள்ளது.
பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு உள்ள எதிர்பார்ப்பு என்ன?
இடைக்கால பட்ஜெட்டில், சம்பல வர்க்கத்தினருக்கான எந்த வித சிறப்பு அறிவிப்பும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் வெளியிடப்படவில்லை. எனவே, இந்த பட்ஜெட்டில் அரசாங்கத்திடம் மாத சம்பல நபர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். தற்போது, பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறையின் அடிப்படையில் வரி கணக்கீடு செய்யப்படுகிறது. புதிய வரி விதிப்பின் (New Tax Regime) கீழ், விலக்கு வரம்பு தற்போதைய ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு சம்பள வர்க்கத்தினரிடம் உள்ளது. இது தவிர, பழைய வரி முறையிலும் (Old Tax Regime) நிவாரணம் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கீழ் வரி விலக்கு (Tax Exemption) வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ