4 மணி நேரத்தில அஞ்சரை லட்சம் கோடி ரூபாய் லாபம்! கண்ணாமூச்சி காட்டும் பங்குசந்தை!

RBI Decision And Stock Exchange Surge: ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்ற ரிசர்வ் வங்கியின் முடிவால், இந்தியப் பங்குச்சந்தையில் உற்சாகம் ஏற்பட்டது. அது பங்குச்சந்தையில் எதிரொலித்தது...  

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சரிந்த பங்குச் சந்தை இன்று மீண்டுள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று (ஜூன் 7, 2024) வாரத்தின் கடைசி வர்த்தக நாள். இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஏற்றம் கண்டன...

1 /9

ரெப்போ வட்டி விகிதம் பழைய நிலையிலேயே தொடரும் என்ற தகவல் வெளியானதை அடுத்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி காணப்பட்டது. இன்று சென்செக்ஸ் 1400க்கும் அதிகமாக உயர்ந்தது

2 /9

இன்றைய வர்த்தக அமர்வில், வங்கி, நிதி, ஆட்டோ மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் 8% வரை உயர்ந்தன. பிஎஸ்இயில் அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனமும் ரூ.5.54 லட்சம் கோடி அதிகரித்து ரூ.421.43 லட்சம் கோடியை எட்டியது. 

3 /9

பங்குச் சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்குகளிலும் நல்ல ஏற்றம் காணப்பட்டது. விப்ரோ பங்குகள் 5%, இன்ஃபோசிஸ் பங்குகள் 3% உயர்ந்தன.

4 /9

டெக் மஹிந்திரா, டிசிஎஸ் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜி என தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் 2, 3% என கணிசமாக அதிகரித்தன  

5 /9

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளும் 8% வரை உயர்ந்துள்ளன. Sunteck Realty மற்றும் Siba பங்குகள் 8% அதிகரித்தன. பிரிகேட், லோதா மற்றும் மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் பங்குகள் 2-5% வரை உயர்ந்துள்ளன.

6 /9

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.5% ஆக வைத்திருப்பதாக இன்று காலை அறிவித்தது. பிப்ரவரி 2023 முதல் தொடர்ந்து எட்டாவது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.5% ஆக வைத்துள்ளது. 

7 /9

உலகெங்கிலும் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% லிருந்து 7.2% ஆக உயரும் என MPC மதிப்பிட்டுள்ளது.

8 /9

பணவீக்கம் குறைந்து, பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது. எரிபொருள் விலை குறைவாக உள்ளது, ஆனால் உணவு விலைகள் இன்னும் அதிகமாக உள்ளன. ரெப்போ விகிதத்தைத் தவிர, மற்ற வட்டி விகிதங்களையும் பழைய நிலையிலேயே ரிசர்வ் வங்கி வைத்துள்ளது

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட பங்குச்சந்தை தொடர்பான இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ்  பொறுப்பேற்காது