Ambani Wedding Cost: ‘வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்’ என ஒரு கூற்று உள்ளது. இவை இரண்டுக்கும் அதிக செலவாகும். ஒரு சொந்த வீடு கட்டவும், குழந்தைகளுக்கு திருமணம் செய்யவும் நம்மில் பலர் நமது சேமிப்பு அனைத்தையும் பயன்படுத்துகிறோம். இது போதாதென்று கடனும் வாங்குகிறோம். ஆனால் அம்பானி வீட்டில் அப்படி இருக்குமா? நிச்சயம் இருக்காது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்பானி கட்டிய வீடும் சரி, அவர் செய்யும் திருமணமும் சரி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் கடைசி மகன் அனந்த் அம்பானிக்கு இன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாடு அரங்கில் திருமனம் நடக்கின்றது. இந்த திருமணத்திற்கு உலக விஐபி -களின் பெரிய கூட்டமே மும்பைக்கு வந்துள்ளது. 


உலக பணக்காரர்கள் பட்டியலில் எப்போதும் டாப் வரிசையில் காணப்படுபவர் முகேஷ் அம்பானி. அவரது கடைக்குட்டி மகனுக்கு கல்யாணம் என்றால் அது எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்பார்களோ, அதை விட பல மடங்குகள் அதிக வியப்பை தருகின்றன திருமண ஏற்பாடுகள். முகேஷ் அம்பானியின் கடைசி மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் பற்றிய செய்திகள் பல நாட்களாக தலைப்புச் செய்திகளாக இருந்து வருகின்றன. 


அம்பானி வீட்டு கல்யாணம்: மொத்த செலவு எவ்வளவு?


உலகமே திரும்பிப் பார்க்கும் அளவில் கொண்டாடப்படும் இந்த திருமணத்தின் செலவு சுமார் 5000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகை அம்பானி குடும்பத்தின் மொத்த நிகர மதிப்பில் 0.5 சதவிகிதம்தானாம். ஒவ்வொரு விருந்தினருக்கும் அளிக்கப்பட்ட திருமண அழைப்பு மற்றும் திருமண பரிசின் விலை ரூ.6.7 லட்சம் என கூறப்படுகின்றது. திருமணத்திற்காக மணமகன், மணமகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளார். சுமாராக ஒவ்வொரு நபருக்கும் ஆடைகளுக்கு மட்டுமே 9 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்களாம்.


சராசரி இந்திய குடும்பத்தை விட குறைவாக செலவு செய்யும் அம்பானி குடும்பம்


அம்பானி வீட்டு திருமண செலவு அதிர்ச்சி அளித்தாலும், இதற்கு மற்றொரு பக்கமும் உள்ளது. ஒரு சராசரி இந்திய குடும்பம் தனது நிகர மதிப்பில் 10-15% -ஐ செலவு செய்வதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அம்பானி குடும்பம் 0.5% -ஐ மட்டுமே செலவு செய்துள்ளது. இந்தியாவில் திருமணங்களுக்காக செய்யப்படும் செலவின் மீதும் இது கேள்வியை எழுப்புகிறது. வாழ்வின் மொத்த சேமிப்பையும் திருமணங்களில் செலவழிக்கும் நடுத்தர வர்க்கம் யோசிக்க வேண்டிய நேரம் இது.


மேலும் படிக்க | அம்பானிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 சீக்ரெட்ஸ்...! வாழ்க்கை சும்மா அம்சமா இருக்கும்


விஐபி விருந்தினர் பட்டியல்


ஆனந்த அம்பானி ராதிகா மஎர்ச்சண்ட் திருமணத்திற்கு வருகை தரும் உலக தொழிலதிபர்களில் சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாகி அமீன் நாசர், பிரிட்டிஷ் எரிசக்தி நிறுவனம், BP Plc சிஇஓ முர்ரே ஆச்சின்க்ளோஸ், கிளாக்சோ நிறுவன சிஇஓ எம்மா வாம்ஸ்லே ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 


அரசியல் தலைவர்களில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்களான போரிஸ் ஜான்சன், டோனி பிளேயர், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.


இந்த திருமண நிகழ்வில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களும், கோலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இன்க் நிறுவனத்தின் உயர்மட்ட சிஇஓக்கள் மற்றும் வங்கியாளர்களும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | இஷா அம்பானி vs நிதா அம்பானி... பாரம்பரிய காஸ்ட்யூமில் போட்டிப்போடும் தாயும் மகளும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ