இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்... ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அனைவரும் வெயிட்டிங்!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்தை முன்னிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களில் ஆடைகள் வைரலாகி வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பிரமலின் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகிறது. அவரின் சமீபத்திய வைரல் ஆடை குறித்து இதில் காணலாம். 

  • Jul 11, 2024, 08:36 AM IST

Anant Ambani Radhika Merchant Wedding: இஷா அம்பானி பிரமல் மாமேரு மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளில் அணிந்து ஆடையும் வைரலானது.   

 

1 /8

திருமண நாள் நெருங்கிவிட்டது, வேறு யாருக்கு... முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு இடையிலான திருமணத்தை (Anant Ambani Radhika Merchant Wedding:) ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.   

2 /8

ஜூலை 12ஆம் தேதியான நாளை முதல் திருமண வைபவம் தொடங்குகிறது. மூன்று நாள்களுக்கு இந்த திருமணம் நடைபெற உள்ளது.     

3 /8

மும்பையில் உள்ள ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமண விழா நடைபெறுகிறது.  

4 /8

ஆனந்த் - அம்பானியின் இந்த திருமண விழாவில் பங்கேற்க பல்வேறு பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் மும்பைக்குக்கு வருகை தந்துள்ளனர்.  

5 /8

இந்த திருமணத்தை முன்னிட்டு இரண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர். முதலாவதாக, மார்ச் மாதத்தில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற கொண்டாட்ட விழாவில் 1,200 பேர் பங்கேற்றனர்.   

6 /8

அதை தொடர்ந்து மே மாதத்தில் இத்தாலி இருந்து பிரான்ஸ் வரை சொகுசு கப்பலில் மூன்று நாள்கள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் உலகின் முன்னணி தொழிலதிபர்களில் இருந்து பிரபலங்கள் வரை பலரும் பங்கேற்றனர்.   

7 /8

இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆகாஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்திருந்த பிரத்யேக ஆடை சமூக வலைதளங்களில் ரசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இவரின் ஆடைகள் வைரலாகின்றன. இப்போது வைரலாகி வரும் ஆடை தருண் தஹிலியானி என்ற மிகவும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டது.   

8 /8

நவீன மற்றும் அழகுபடுத்தப்பட்ட லெஹங்கா ஆடை அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. பட்டு நூல் கொண்ட நுண்ணிய வேலைப்பாடுகளான இந்த ஆடை பிரஞ்சு முடிச்சுகளால் இன்னும் சிறப்பு பெறுகின்றன. அதுமட்டுமின்றி ஜர்தோசி கை வேலைப்பாடு ஆடையில் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படிகங்களால் அவரின் ஆடையே மின்னியது. கவர்ந்திழுக்கும் நெக்லைன் மற்றும் தொப்பி போன்ற கையுடைய ரவிக்கையுடன் லெஹங்காவும் இணைக்கப்பட்டுள்ளது. அவரின் துப்பட்டா வரை அனைத்தும் சிறப்புதான்.