அடுத்த நிதியாண்டிலேயே (2023-2024) வரி செலுத்துவோரில் குறைந்தபட்சம் 50-66 சதவிகிதினர் (மூன்றில் இரண்டு பங்கு) புதிய வரி முறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அவர்,"புதிய வரி விதிப்பு முறைக்கு எத்தனை பேர் மாறுவார்கள் என்பதை நாங்கள் வரி செலுத்துவோரிடம் விட்டுவிட்டோம். வரி செலுத்துவோர் எந்த வரி முறையில்கீழ் வரிசெலுத்த விரும்புகிறார்கள் என்பது அவர்கள் முடிவுதான். ஆனால் குறைந்தபட்சம் 50 சதவிகிதினர் மாறுவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். 65-66 சதவீதம் (மூன்றில் இரண்டு பங்கு) வரி செலுத்துவோர் முதல் ஆண்டிலேயே புதிய வரி முறைக்கு மாற வாய்ப்புள்ளது" என்றார்.


மேலும் படிக்க | அதானி மொத்தம் இழந்தது எத்தனை லட்சம் கோடி தெரியுமா? சாம்ராஜ்ஜியம் எழுவது சாத்தியமா?


வரிகள் விவரம்


பட்ஜெட் அறிவிப்பை மேற்கோள் காட்டி அவர் பேசுகையில்,"2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி முறையின்கீழ் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் தனிநபர் வரி செலுத்துவோருக்கு கிடைக்கும் வருமான வரி தள்ளுபடி வரம்பு தற்போதைய ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது" என்றார். மேலும், புதிய வருமான வரி முறையில் ஐந்து அடுக்குகளை மட்டுமே அரசு அறிவித்துள்ளது என்றார்.


தனிநபர் வருமான வரியில், ரூ. 3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிகள் கிடையாது என்றும், ரூ. 3 லட்சம் - ரூ. 6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும், ரூ.6 லட்சம் மேல், ரூ.9 லட்சம் வரை வருமானம் இருந்தால் 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ரூ. 9 லட்சம் மேல் ரூ. 12 லட்சம் வரை வருவாய் இருந்தால் 15 சதவீதமும், ரூ. 12 லட்சம் மேல் ரூ. 15 லட்சம் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதமும், ரூ. 15 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமும் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


வரி விலக்கு விவரம்


"சம்பளம் மட்டுமல்ல, சாதாரண மக்களும் சம்பளம் பெறாதவர்களுக்கும் கூட, நாங்கள் வரி அடுக்குகளை கணக்கிட்டுள்ளோம். வரி அடுக்குகளை 6 முதல் 5 அடுக்குகளாக குறைத்துள்ளோம். பலர் இந்த திட்டத்திற்கு மாறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ரூ. 7 லட்சம் வரை வருமானம் உள்ள எவருக்கும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். https://zeenews.india.com/tamil/business-news/income-tax-new-slabs-how-much-tax-can-a-taxpayer-save-431204


7 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர் மற்றும் ரூ. 7 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் நபருக்கு நாங்கள் ரூ.50,000 நிலையான விலக்குப் பலனை வழங்கியுள்ளோம், அதாவது ஒருவரின் மொத்த வருமானம் 7.5 லட்சம், பிறகு 50,000 கழித்த பிறகும் அவரது வருமானம் 7 லட்சமாக இருக்கும், மேலும் அவர் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை" என்று அவர் விளக்கினார்.


மேலும் படிக்க | அதானிக்கு அள்ளிக்கொடுத்த SBI-ன் கடந்த 3 மாத லாபம் என்ன தெரியுமா? பல கோடியாம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ