SBI In Sri Lanka: மத்திய நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) இலங்கையின் திருகோணமலையில் (Trincomalee) பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையை வியாழக்கிழமை திறந்து வைத்தார். எஸ்பிஐ இலங்கையில் 159 ஆண்டுகளாக உள்ளது. அங்குள்ள பழமையான வங்கிகளில் எஸ்பிஐயும் ஒன்று. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அதிகாரபூர்வ விஜயத்தின் போது திருகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளையை இன்று திறந்து வைத்துள்ளதாக நிதியமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிளையை தொடக்கி வைத்த பிறது, அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய கிளையின் அதிகாரிகளுடன் உரையாடினார் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பாஸ் புத்தகங்களை விநியோகித்தார் மற்றும் இலங்கையின் திருகோணமலையில் பார்வையாளர் புத்தகத்தையும் நிரப்பினார். இலங்கையில் SBI இன் கிளை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, SBI Sri Lanka தனது வணிகத்தை YONO செயலி மற்றும் ஆன்லைன் வங்கி மூலம் வலுவான டிஜிட்டல் தளம் மூலம் வளர்த்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர, சர்வதேச வர்த்தகத்தில் பெருநிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் SBI Sri Lanka முக்கிய பங்கு வகிக்கிறது.



இலங்கை பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்கி எஸ்பிஐ உதவியது. இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரி கோபால் பாக்லே மற்றும் SBI இன் தலைவர் தினேஷ் காரா ஆகியோரும் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் நியூஸ்.. ரயில்வே புதிய அறிவிப்பு வெளியீடு


SBI இலங்கையுடனான தனது முதலாவது டாலர் அல்லாத பரிவர்த்தனையை மார்ச் மாதம் நிறைவு செய்தது. அமெரிக்க டாலர்கள் இல்லாத நாடுகளை இந்தியா அமைப்புக்குள் கொண்டுவர விரும்புவதால், ஏற்றுமதிக்கான கட்டணம் இலங்கை ரூபாயில் செய்யப்பட்டது. டாலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.1 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ