ஆதார் அப்டேட்: குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ஜூன் 14 வரை இலவசம்
ஆதார் அப்டேட்: ஆதார் அப்டேட் இலவசமாக செய்து கொள்வதற்கான காலக்கெடு இப்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Aadhaar Free Update: ஆதார் அட்டை விவரங்களை இலவசமாகப் ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ள மார்ச் 14 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான காலக்கெடு இப்போது 2 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 14 ஆம் தேதி வரை ஆதார் அப்டேட் இலவசமாக செய்து கொள்ளலாம். அரசு பொது சேவை மையங்கள் மற்றும் myAadhaar போர்ட்டலில் மட்டுமே இலவசமாகக் ஆதார் அப்டேட் செய்து கொள்ளலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்டு, அதன்பின் இதுவரை புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (POI/PoA) ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை இலவசமாக மார்ச் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
ஆன்லைனில் ஆதார் அட்டை புதுப்பிப்பு: அதை எப்படி செய்வது?
- ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ -ல் லாகின் செய்யவும்.
- 'Continue Address Update' என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) பதிவிடவும்.
-'Document Update' என்பதைக் கிளிக் செய்து லேட்டஸ்ட் குடியிருப்பு முகவரியை கொடுக்கவும்.
- விவரங்களைச் சரிபார்த்து, அடுத்த ஹைப்பர்லிங்கில் கிளிக் செய்யவும்.
- கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- முகவரி ஆதாரத்தை பதிவேற்றவும்.
- 'Submit' பொத்தானைத் தேர்ந்தெடுத்து ஆவணங்களைப் பதிவேற்றவும்.
-14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) உருவாக்கப்பட்ட பிறகு அப்டேட் கோரிக்கை ஏற்கப்படும்.
ஆதார் அட்டை புதுப்பிப்பு: முகவரிச் சான்றினை எவ்வாறு பதிவேற்றுவது?
- https://myaadhaar.uidai.gov.in/ க்குச் செல்லவும்.
- லாகின் செய்து "Update Name/Gender/DOB and Address” என்பதைத் தேர்ந்தெடுத்து, “Update Aadhaar Online” என்பதைக் கிளிக் செய்யவும்.
-'Address' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Proceed to update Aadhaar' என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பதிவேற்றி, தேவையான தகவலை உள்ளிடவும்.
மேலும் படிக்க | இன்னும் மூணு நாள் தான் இருக்கு... ஆதார் கார்டு அப்டேட் பண்ணிட்டீங்களா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ