PhonePe, Google Pay, Paytm பயனர்களுக்கு சூப்பர் செய்தி!! UPI கட்டண வரம்பு அதிகமானது
UPI Transactions: மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் செலுத்துவதற்கு NPCI தளர்வு அளித்துள்ளது. இந்த புதிய விதி ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
UPI Transactions: ஆன்லைனில் பணம் செலுத்துவோருக்கு புத்தாண்டில் மத்திய அரசு பெரும் பரிசை வழங்கியுள்ளது. இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் ஆன்லைனில் பணம் செலுத்தும் செயல்முறை அதிகமாகி வருகிறது. இது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில் விதிக்கப்பட்டிருக்கும் வரம்பு ஒரு பெரிய சிக்கலாக இருந்து வந்தது.
அதாவது, ஒரு நாளில் ரூ.1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகளை அரசு தடை செய்துள்ளது. இருப்பினும், இப்போது நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதாவது NPCI இந்திய ரிசர்வ் வங்கியுடன் (Reserve Bank of India) இணைந்து, இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளது. அதன் பிறகு இப்போது ஒரே நேரத்தில் 5 லட்ச ரூபாய் வரை UPI மூலம் செலுத்தலாம். இருப்பினும், இது சில நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய வசதி பற்றியும் இதில் உள்ள நிபந்தனைகள் பற்றியும் அனைத்து பயனர்களும் அறிந்திருக்க வேண்டும்.
1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் செலுத்துவதற்கு NPCI தளர்வு அளித்துள்ளது. இந்த புதிய விதி ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்குப் பிறகு, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் கட்டணங்களைச் செலுத்த யுபிஐ பயனர்கள் (UPI Users) ஒரே நேரத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை செலுத்த முடியும். இதற்காக, வங்கிகள் (Banks) மற்றும் கட்டண சேவை வழங்குநர்களுக்கு NPCI ஆல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உங்களுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் வந்ததா? இதுதான் காரணம்
கட்டண வரம்பு அதிகரித்துள்ளது
சரிபார்க்கப்பட்ட வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கட்டண வரம்பு NPCI ஆல் செயல்படுத்தப்படும். அதிகரித்த வரம்புடன், வணிகர் UPIஐ கட்டண முறையாக (Payment Mode) இயக்க வேண்டும். தற்போது, இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சில் (NPCI) மூலம் UPI கட்டண வரம்பு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதிக்கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி (RBI) இந்த வரம்பை 5 லட்ச ரூபாயாக மாற்றுவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்திருந்தது. இதன் காரணமாக பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) போன்ற கட்டண செயலிகள் பயனடையும்.
UPI கட்டணத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது
UPI அடிப்படையிலான பணம் செலுத்துதல்களைப் பற்றி நாம் பேசினால், 2023 ஆம் ஆண்டில், UPI பேமெண்ட்களின் அடிப்படையில் இந்தியா 100 பில்லியனைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு முழுவதும், ரூ.118 பில்லியன் மதிப்பிலான தொகை UPI கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இதில் 60 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்
UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் விரைவில் Tap & Pay வசதியைப் பெறுவார்கள் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், பணம் செலுத்தும் இயந்திரத்தை உங்கள் மொபைல் கொண்டு தொட்டால் போதும். அதன் பிறகு கட்டணம் தானாகவே செலுத்தப்படும். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்தச் சேவையை வழங்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி 31 ஜனவரி 2024க்குள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.7500 வரை கேஷ்பேக்... DCB வங்கி வழங்கும் அசத்தல் ஆஃபர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ