Income Tax Update: வருமான வரித் துறை சமீபத்தில் வரி செலுத்துவோருக்கு ஒரு ஆலோசனை அறிக்கையை அனுப்பியுள்ளது. வரி செலுத்துவோர் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் உள்ள தகவல்களுக்கும் அறிக்கை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையிடல் நிறுவனங்களில் வங்கிகள், பங்குச் சந்தை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் மியூசுவல் ஃபண்டு நிறுவனங்கள் போன்ற ஏஜென்சிகள் அடங்கும்.
சமீபத்திய அறிக்கைகளின்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 3 மில்லியன் சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் விழிப்பூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது TDS (மூலத்தில் கழிக்கப்படும் வரி) மற்றும் அவர்களின் திருத்தப்பட்ட வரிக் கணக்குகளில் அவர்கள் கோரும் ரீஃபண்டுகள் (Income Tax Refund) ஆகியவற்றுக்கு இடையே உள்ள வெளிப்படையான பொருத்தமின்மையை எடுத்துக்காட்டுகிறது.
திருத்தப்பட்ட ரிட்டன்களை தாக்கல் செய்ய டிசம்பர் 31 கடைசி நாளாக இருந்தபோதிலும், 2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கு (Assessment Year 2023-24) தாக்கல் செய்யப்பட்ட வருமானத்தில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின் விளக்கம் கேட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வரி செலுத்துவோர் அறிக்கை, வருமான விலக்குகள், வங்கி விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள், அல்லது வருமானம் பொருந்தாமை ஆகியவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ளவும் வருமான வரித்துறை (Income Tax Department) அனுமதிக்கிறது.
மேலும் படிக்க | UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.7500 வரை கேஷ்பேக்... DCB வங்கி வழங்கும் அசத்தல் ஆஃபர்!
வரி செலுத்துவோர் வசதிக்காகவும், துறைக்குக் கிடைக்கும் தகவல்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் விழிப்பூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று 26 டிசம்பர் 2023 அன்று, வருமான வரித் துறையானது ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளது.
"இது அனைத்து வரி செலுத்துவோருக்கும் அனுப்பப்பட்ட நோட்டீஸ் (Income Tax Notice) அல்ல. ஐடிஆர் (ITR) மற்றும் அறிக்கையிடல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு இடையே வெளிப்படையான பொருந்தாத தகவல்கள் உள்ள நபர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும் ஒரு ஆலோசனையாகும் இது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோர் இந்த அறிவிப்பைப் பெற்றிருந்தால், அவர்கள் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இணக்க போர்ட்டல் (Compliance Portal) மூலம் கருத்துக்களை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் திருத்தப்பட்ட ரிட்டனையும் (Revised Return) தாக்கல் செய்ய வேண்டும். மறுபுறம், வரி செலுத்துவோர் தங்களால் ஏற்க முடியாத வேறுபாடுகளுக்கு போர்ட்டலில் மறுப்பு தெரிவிக்கலாம். மேலும் அதற்கான காரணங்களையும் அவர்கள் தெரிவிக்கலாம்.
ஐடிஆர், டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் விலக்குகள் ஆகியவை ஒத்திசைந்து இருப்பதை உறுதி செய்வது சுமூகமான வரி தாக்கல் (ITR Filing) செய்ய மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே மதிப்பீட்டுச் செயல்பாட்டில் சிக்கல்களைக் குறைப்பதற்கு, வரி செலுத்துவோர் ஆலோசனை அறிவிப்பை கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும், தகவலை கிராஸ்-வெரிஃபை செய்து. வேறுபாடுகளை விரைவாக சரிசெய்ய வேண்டும்.
ஏதேனும் மாற்றங்களைச் செய்ய அல்லது தாமதமான ஐடிஆரைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏற்கனவே கடந்துவிட்ட நிலையில், வரி செலுத்துவோர் விழிப்பூட்டல்களுக்கான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை என்றால், வருமான வரித்துறையானது, வரி செலுத்துவோரின் வருமான வரி தாக்கல் அறிக்கையில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு நோட்டீசை வெளியிடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ