வெறும் ₹.351-க்கு 100GB டேட்டா; Vi-யின் அட்டகாசமான Work From Home திட்டம்!
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் ரூ.351 க்கு தினசரி வரம்பில்லாத ஒரு புதிய டேட்டா பேக்கை அறிமுகம் செய்துள்ளது..!
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் ரூ.351 க்கு தினசரி வரம்பில்லாத ஒரு புதிய டேட்டா பேக்கை அறிமுகம் செய்துள்ளது..!
டெலிகாம் ஆபரேட்டர் வோடபோன் ஐடியா, சமீபத்தில் தன்னை ‘Vi’ என்று மறுபெயரிட்டது. இடாகியடுத்து தனது வாடிக்கையாளர்களை கவர தொடர்ந்து அட்டகாசான திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரூ .351 விலையில் புதிய ப்ரீபெய்ட் டேட்டா பேக்கை தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டமானது 100 ஜிபி அளவிலான டேட்டாவை 56 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வெறும் ரூ.351 க்கு வழங்குகிறது. கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் எந்த விதமான தினசரி டேட்டா வரம்பும் கிடையாது. அதாவது நீங்கள் விரும்பும் அளவிலான டேட்டாவை ஒவ்வொரு நாளும் டேட்டா கேப் வரம்பு இல்லாமல் பயன்படுத்தலாம்.
Vi-லிருந்து வரும் இந்த புதிய டேட்டா பேக் ஆனது மாணவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், கிரிக்கெட் பிரியர்கள், மற்றும் கேமிங் ஆர்வலர்கள் ஆகியோர்களை குறிவைத்து அறிமுகமாகி உள்ளது. இதுதவிர்த்து, GIGAnet என்கிற திட்டத்தையும் Vi நிறுவனம் அறிவித்தது, நிறுவனத்தின் கூற்றுப்படி இது நிகழ்நேரத்தில் பயனர்கள் எல்லா விஷயங்களுடனும் இணைக்க உதவும். இதன் மூலம் Vi நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை அவர்களிடம் ஒட்டிக்கொள்வதற்கான வழிகளைத் தேடுகிறது என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது.
ALSO READ | ரிலையன்ஸ் COVID-19 டெஸ்ட் கிட் மூலம் முடிவுகளை இனி 2 மணி நேரத்தில் பெறலாம்..!
இந்த ஆபரேட்டர் அதன் பயனர்களுக்கு ஒரு சில சிறப்பு சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.அப்படியான சமீபத்திய சலுகைகளில் ஒன்று தான் - தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு 1GB அளவிலான 4G டேட்டாவை 7 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்துடன் இலவசமாக வழங்கியது.
வோடபோன் ஆப் வழியாக இந்த சலுகை உங்களுக்கு கிடைத்துள்ளதா என்பதை சரிபார்க்கலாம், மேலும் இது குறித்து ஒரு அறிவிப்பு வந்துவிட்டதா என உங்கள் இன்பாக்ஸையும் சரிபார்க்கலாம், ஏனெனில் எந்த பயனர் எப்போது இந்த சலுகையை பெறுவார் என்பது குறித்த எந்தவிதமான காலக்கெடுவும் இல்லை, மேலும் இந்த சலுகைக்கான குறிப்பிட்ட தகுதிகளும் இல்லை.
இது தவிர்த்து, ரூ.355, ரூ.405, ரூ.595, ரூ.795 மற்றும் ரூ.2,595 ஆகிய ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் Vi நிறுவனம் இலவச ZEE5 பிரீமியம் சந்தாவையும் வழங்குகிறது.