எச்சரிக்கை! இந்த தவறுகளை செய்யாதீர்கள்! கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்படும்!
Loan Apply: கடன் தவணை தொகையை நீங்கள் தாமதமாகவோ அல்லது சரியாக செலுத்தாமலோ இருந்து வந்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
Loan Apply: கடன் பெறுவதற்கு மிகவும் முக்கியமான ஒன்று கிரெடிட் ஸ்கோர் தான், உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப்பெரிய காரணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கடன் தவணை தொகையை நீங்கள் தாமதமாகவோ அல்லது சரியாக செலுத்தாமலோ இருந்து வந்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஏதேனும் சில காரணங்களால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்தால், அதனை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். 300 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் மதிப்பெண்கள் உள்ளது, இதில் அதிக மதிப்பெண்கள் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர்கள் எளிதில் கடன் வழங்கி விடுவார். அதேசமயம் குறைந்த மதிப்பெண் வைத்திருப்பவர்களுக்கு கடன் ஆபத்துகள் அதிகம். 750 அல்லது அதற்கு மேல் வைத்திருப்பது, கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பெரும்பான்மையான வங்கிகள் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கடனை வழங்கும், கடன் பெறுவதற்கான அதிகபட்ச வயது 58 ஆகும். தனிநபர் கடனுக்கான தகுதியுடையவரா மற்றும் வட்டி விகிதம் என்ன என்பதைத் தீர்மானிக்கும் முன், எந்தவொரு கடன் வழங்கும் நிறுவனமும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கும். உயர்ந்த நிலையில் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது தனிநபர்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் கடன் வழங்குபவர்களுக்கு உறுதிப்படுத்த உதவுகிறது. இப்போது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக்கூடிய முக்கியமான காரணிகளை பின்வருமாறு காண்போம்.
மேலும் படிக்க | 7th Pay Commission அதிரடி அப்டேட்: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு
1) கட்டண வரலாறு:
கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப்பெரிய காரணி ஆகும். நீங்கள் தாமதமாக பணம் செலுத்தினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் எதிர்மறையாக பாதிக்கப்படும். சில காரணங்களால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்தால், அதை பழைய நிலைக்கு கொண்டு வர குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.
2) கடன் வரலாறு:
நீங்கள் எத்தனை முறை கடன் வாங்கியிருக்கிறீர்கள் மற்றும் அந்தக் கடனை எப்படி திருப்பிச் செலுத்தினீர்கள் என்பதை கடன் வரலாறு காட்டுகிறது. உங்கள் கடன் வரலாறு நல்ல நிலையில் இருக்குமானால் உங்கள் கிரெடிட் ஸ்கோரும் நல்ல நிலையில் இருக்கும், உங்களுக்கு கடன் பெறும் வாய்ப்புகளும் அதிகமிருக்கும்.
3) கிரெடிட் வகை:
உங்கள் கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிக்கும் போது நீங்கள் வைத்திருக்கும் கடன்களின் வகைகள் பரிசீலிக்கப்படும். எனவே நீங்கள் பல்வேறு கிரெடிட் கணக்குகளை வைத்திருந்தாலும் அந்த அத்தனை கணக்குகளையும் பொறுப்புடன் பராமரிப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும்.
4) புதிய கடன்:
பொதுவாக கடன் வழங்குபவர்கள் உங்களுக்கு கடனை வழங்கும்போது உங்களிடம் உள்ள கிரெடிட் கணக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கின்றனர் மற்றும் நீங்கள் கடைசியாக எப்போது கணக்கைத் திறந்தீர்கள் என்கிற டேட்டாவையும் கடன் வழங்குநர்கள் சரிபார்க்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன், அடமானம் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது கடன் வழங்குபவர்கள் உங்கள் கிரெடிட் ஃபைலை தீவிரமாக கண்காணிப்பார்கள்.கடன் வாங்குபவர்கள் இந்த தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்!
கடன் பெறுவதற்கு மிகவும் முக்கியமான ஒன்று கிரெடிட் ஸ்கோர் தான், உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப்பெரிய காரணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கடன் தவணை தொகையை நீங்கள் தாமதமாகவோ அல்லது சரியாக செலுத்தாமலோ இருந்து வந்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஏதேனும் சில காரணங்களால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்தால், அதனை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். 300 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் மதிப்பெண்கள் உள்ளது, இதில் அதிக மதிப்பெண்கள் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர்கள் எளிதில் கடன் வழங்கி விடுவார். அதேசமயம் குறைந்த மதிப்பெண் வைத்திருப்பவர்களுக்கு கடன் ஆபத்துகள் அதிகம். 750 அல்லது அதற்கு மேல் வைத்திருப்பது, கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பெரும்பான்மையான வங்கிகள் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கடனை வழங்கும், கடன் பெறுவதற்கான அதிகபட்ச வயது 58 ஆகும். தனிநபர் கடனுக்கான தகுதியுடையவரா மற்றும் வட்டி விகிதம் என்ன என்பதைத் தீர்மானிக்கும் முன், எந்தவொரு கடன் வழங்கும் நிறுவனமும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கும். உயர்ந்த நிலையில் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது தனிநபர்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் கடன் வழங்குபவர்களுக்கு உறுதிப்படுத்த உதவுகிறது. இப்போது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக்கூடிய முக்கியமான காரணிகளை பின்வருமாறு காண்போம்.
1) கட்டண வரலாறு:
கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப்பெரிய காரணி ஆகும். நீங்கள் தாமதமாக பணம் செலுத்தினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் எதிர்மறையாக பாதிக்கப்படும். சில காரணங்களால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்தால், அதை பழைய நிலைக்கு கொண்டு வர குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.
2) கடன் வரலாறு:
நீங்கள் எத்தனை முறை கடன் வாங்கியிருக்கிறீர்கள் மற்றும் அந்தக் கடனை எப்படி திருப்பிச் செலுத்தினீர்கள் என்பதை கடன் வரலாறு காட்டுகிறது. உங்கள் கடன் வரலாறு நல்ல நிலையில் இருக்குமானால் உங்கள் கிரெடிட் ஸ்கோரும் நல்ல நிலையில் இருக்கும், உங்களுக்கு கடன் பெறும் வாய்ப்புகளும் அதிகமிருக்கும்.
3) கிரெடிட் வகை:
உங்கள் கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிக்கும் போது நீங்கள் வைத்திருக்கும் கடன்களின் வகைகள் பரிசீலிக்கப்படும். எனவே நீங்கள் பல்வேறு கிரெடிட் கணக்குகளை வைத்திருந்தாலும் அந்த அத்தனை கணக்குகளையும் பொறுப்புடன் பராமரிப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும்.
4) புதிய கடன்:
பொதுவாக கடன் வழங்குபவர்கள் உங்களுக்கு கடனை வழங்கும்போது உங்களிடம் உள்ள கிரெடிட் கணக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கின்றனர் மற்றும் நீங்கள் கடைசியாக எப்போது கணக்கைத் திறந்தீர்கள் என்கிற டேட்டாவையும் கடன் வழங்குநர்கள் சரிபார்க்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன், அடமானம் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது கடன் வழங்குபவர்கள் உங்கள் கிரெடிட் ஃபைலை தீவிரமாக கண்காணிப்பார்கள்.
மேலும் படிக்க | Old Pension திட்டத்தில் முக்கிய மாற்றும்..புதிய அப்டேட்டை வெளியிட்ட அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ