Senior Citizens: ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்பான வழியில் நல்ல வருமானம் அளிக்கும் முதலீட்டு திட்டங்கள்
Saving Schemes: சிலர் ஆபத்துகள் இருந்தாலும், அதிக வருமானம் அளிக்கும் மியூசுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தை போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். எனினும், சிலரோ பாதுகாப்பான திட்டங்களில் மட்டுமே தங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைகிறார்கள்.
Saving Schemes: நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. கடினமாக உழைத்து நாம் ஈட்டும் பணத்தை நாம் பாதுகாக்கவும் பெருக்கவும் பல வித திட்டங்களில் முதலீடு செய்கிறோம். பெரும்பாலானோர் மாதா மாதம் தங்கள் வருமானத்தில் இருந்து ஒரு தொகையை எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்கிறார்கள். சேமிப்பு என்பது மிக நல்ல ஒரு பழக்கமாகும். முதுமை, பணி ஓய்வு, எதிர்பாராத செலவுகள் என நமக்கு எப்போது வேண்டுமானாலும் பணத்திற்கான தேவை ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் சேமிக்கும் பணம் நமக்கு உதவும். சிலர் பணத்தை சேமிக்கிறார்கள், சிலர் முதலீடு செய்கிறார்கள்.
சிலர் ஆபத்துகள் இருந்தாலும், அதிக வருமானம் அளிக்கும் மியூசுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தை போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். எனினும், சிலரோ பாதுகாப்பான திட்டங்களில் மட்டுமே தங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைகிறார்கள். எந்த வித ஆபத்தும் இல்லாமல் முதலீடு செய்யக்கூடிய சில பாதுகாப்பான முதலீட்டு வழிகளை பற்றி இங்கே காணலாம்.
அரசு பத்திரங்கள் (Government Bonds)
அரசாங்கம் சில சமயங்களில் தனது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பத்திரங்களை வெளியிடுகிறது. இதில் மக்களும் நிறுவனங்களும் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர். அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என நம்பப்படுகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, அரசாங்கம் வட்டி விகிதங்களின்படி முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் பணத்தை திருப்பித் தருகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Saving Scheme)
மூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்புத் திட்டம் SCSS என்றும் அழைக்கப்படுகிறது. நிலையான வருமானம் கொண்ட சிறு சேமிப்பு திட்டத்தால் வழங்கப்படும் அதிக வட்டி விகிதங்களில் இதுவும் ஒன்றாகும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த திட்டத்தின் வட்டி விகிதம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் வட்டி விகிதம் மாறிக்கொண்டே இருக்கின்றது.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme)
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு பாதுகாப்பான சிறு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கிறார்கள். இந்த முதலீட்டு திட்டத்திற்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தின் படி வட்டி வசூலிக்கப்படுகிறது. இதன் படி முதலீட்டாளருக்கு மாதாந்திர அடிப்படையில் பணம் செலுத்தப்படுகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit)
ஃபிக்ஸட் டெபாசிட் (FD) -இல், முதிர்வு தேதி வரை கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகின்றது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு நிலையான வட்டி வழங்கப்படுகின்றது. ஆபத்து இல்லாத முதலீடுகளில் இது மிகவும் பிரபலமான ஒரு தேர்வாக உள்ளது.
மாதாந்திர வருமான மியூச்சுவல் ஃபண்டுகள் (Monthly Income Mutual Funds)
இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளருக்கு லாபத்தில் அவரது பங்கு கிடைக்கிறது. எனினும், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான லாபத்தை அவர் பெறுவார் என உறுதியாக கூற முடியாது. இந்த வகையான ஃபண்டுகளில் பெரும்பாலும் கடன் மற்றும் பணச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. ஆகையால் இதில் முதலீடு செய்வதில் ரிஸ்கும் உள்ளது. எனினும், இதில் குறைந்த அளவு ரிஸ்க் எடுத்தால் அதிக வருமானத்தை ஈட்டலாம்.
கார்ப்பரேட் நிலையான வைப்பு (Corporate Fixed Deposit)
இதுவும் ஒரு வகையான ஃபிக்ஸ் டெபாசிட் ஆகும். இதில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை டெபாசிட் செய்யும் வசதி வழங்கப்படுகின்றன. இந்த எஃப்டி திட்டத்தில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களை விட அதிக வட்டி தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வீடு வாங்க பிளான் இருக்கா? இந்த வங்கிகளில் மலிவான வட்டிக்கு ஹோம் லோன் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ