வீடு வாங்க பிளான் இருக்கா? இந்த வங்கிகளில் மலிவான வட்டிக்கு ஹோம் லோன் பெறலாம்

Home Loan Interest Rates: நீங்களும் வீடு வாங்க வீட்டு கடன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ இந்த செய்தியை உடனே படிக்கவும். இங்கு வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 10, 2024, 01:08 PM IST
  • குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கும் டாப் வங்கிகள் இவைதான்.
  • புதிதாக வீட்டு கடன் வாங்க திட்டமிட்டிருந்தால் உடனே இதை படிக்கவும்.
வீடு வாங்க பிளான் இருக்கா? இந்த வங்கிகளில் மலிவான வட்டிக்கு ஹோம் லோன் பெறலாம் title=

Home Loan Interest Rates: இந்தியாவில் நடுத்தர குடும்பங்களின் முக்கிய வாழ்நாள் கனவுகளில் ஒன்றாக சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது தான். அந்த வகையில் இந்தியாவில் வீட்டுக் கடன்கள் என்பது குடியிருப்பு சொத்துக்களை வாங்குவதற்கு நிதியளிக்கும் ஒரு பிரபலமான வழியாகும். இந்த வீட்டுக் கடனுக்குத் தகுதி பெற, வயது, வருமானம், வேலைவாய்ப்பு நிலை, உட்பட அனைத்தும் சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. அதேபோல் கடன் வழங்கும் வங்கிகளின் சில சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த வகையில் நீங்களும் தற்போது வீடு வாங்க வங்கியில் இருந்து வீட்டு கடனை பெற திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் எந்த வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளவும். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகளின் பெயர்கள் எவை என்பதன் முழு விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் மிகவும் குறைந்த விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகின்றன. இந்த வங்கிகளின் வட்டி விகிதத்தை இப்போது  தெரிந்துக்கொள்வோம்..

1) பேங்க் ஆஃப் இந்தியா - Bank of India:
குறைந்த விலையில் வீட்டுக் கடனை வழங்கும் வங்கிகளின் ஒன்று பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கியின் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 8.30 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. அதேபோல் வெட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் சொத்து மதிப்பில் 90 சதவீதம் வரை கடனைப் பெறலாம், மேலும் இந்த பணம் செலுத்த 30 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படும். இது தவிர, வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஓவர் டிராஃப்ட் (ஓவர் டிராஃப்ட் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டியில் குறிப்பிட்ட காலத்திற்கான ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு வங்கியால் வழங்கப்படும் கடன் வரி ஆகும்) மற்றும் வீட்டுக் கடன் இருப்பு பரிமாற்ற சேவைகளையும் வங்கி வழங்குகிறது.

2) ஹெச்டிஎஃப்சி வங்கி - HDFC Bank:
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி ஹெச்டிஎஃப்சி வங்கியாகும். இந்த வங்கியின் 30 லட்சம் முதல் 75 லட்சம் வரையிலான வீட்டு கடன் விகிதம் 8.35 சதவீதத்தில் தொடங்குகிறது.

மேலும் படிக்க | அடி தூள்!! அகவிலைப்படியை தொடர்ந்து HRA அதிரடி உயர்வு: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

3) பேங்க் ஆஃப் பரோடா - Bank of Baroda:
பாங்க் ஆப் பரோடாவின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில்  ஆண்டுக்கு 8.40 சதவீதம் முதல் 10.60 சதவீதம் வரை தருகிறது. இந்த விகிதங்கள் CIBIL ஸ்கோரைப் பொறுத்து வழங்கப்படும்.

4) பாரத ஸ்டேட் வங்கி - State Bank of India:
எஸ்பிஐ மிகவும் மலிவு விலையில் வீட்டுக் கடனை வழங்குகிறது. இதில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.40 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. வாடிக்கையாளர் 30 ஆண்டுகளுக்கு கடன் செலுத்தும் விருப்பத்தை பெறுவார்கள். பெண்களுக்கு 0.05% கூடுதல் வட்டி அளிக்கிறது.

5) ஐசிஐசிஐ வங்கி - ICICI Bank:
35 முதல் 75 லட்சம் வரை வீட்டுக்கடனுக்காக 9.5 முதல் 9.8 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

6) பஞ்சாப் நேஷனல் வங்கி - Punjab National Bank:
பஞ்சாப் நேஷனல் வங்கி ஆண்டுக்கு 8.45 சதவீதம் முதல் 10.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடனை வழங்குகிறது. இதில் CIBIL மதிப்பெண் பெற்றிருத்தே குறைந்த கட்டணத்தில் வீட்டுக் கடனைப் பெற உதவுகிறது.

மேலும் படிக்க | PF Withdrawal Rules: உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News