Income Tax: வருமான வரித்துறை நமது அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கிறது. பண பரிவர்த்தனைகள் செய்தால் கூட வரி செலுத்த வேண்டுமா? இதற்கும் வருமான வரித்துறை (Income Tax Department) நோட்டீஸ் அனுப்புமா? கணவன் மனைவிக்கு இடையில், தந்தை மகனுக்கு, மகளுக்கு இடையில், இப்படி சொந்தங்களுக்கு இடையில் எவ்வளவு பண பரிவர்த்தனைகளை செய்யலாம்? உங்களுக்கும் இப்படிப்பட்ட கேள்விகள் உள்ளதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பதிவில் இப்படிப்பட்ட பண பரிவர்த்தனைகளை பற்றி விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடும்ப நபர்களுக்கு இடையே அடிக்கடி பண பரிமாற்றம் (Cash Transaction) செய்யும் நபர்கள் சில விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். நமது ஒவ்வொரு பரிவர்த்தனையும் வருமானத்திற்கு ஒரு வழியாகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வகையிலான பண பரிவர்த்தனைகளுக்கும் வருமான வரி நோட்டீஸ் கிடைக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே எவ்வளவு பண பரிவர்த்தனை செய்யலாம்? 


வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புகிறதா?


வரி நிபுணர்களின் கூற்றுப்படி, கணவர் ஒவ்வொரு மாதமும் வீட்டு செலவுக்கு பணம் கொடுத்தாலோ அல்லது பரிசாக கொடுத்தாலோ, மனைவிக்கு வருமான வரி (Income Tax) விதிக்கப்படாது. இந்த இரண்டு வகையான தொகைகளும் கணவரின் வருமானமாக கருதப்படும். இந்தத் தொகைக்கு வருமான வரித் துறையிடம் இருந்து மனைவிக்கு எந்த நோட்டீசும் வராது. ஆனால், மனைவி மீண்டும் மீண்டும் இந்தப் பணத்தை எங்காவது முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்றால், அந்த வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதை வேறு வார்த்தைகளில் கூறு வேண்டுமானால், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படும் முதலீட்டு வருமானம் மனைவியின் வருமானமாக கருதப்படும், அதில் வரி செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | UPI பயனர்களுக்கான அலர்ட்! புதிய விதிகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்!


வருமான வரியின் 269எஸ்எஸ் மற்றும் 269டி பிரிவின் கீழ் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் தளர்வுகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம். 


இந்த வழக்குகளில் விலக்கு கிடைக்கும்


உதாரணமாக, தந்தை-மகன், கணவன்-மனைவி மற்றும் சில நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு அபராதம் இல்லை. இந்த வழக்குகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எளிமையான வார்த்தைகளில் சொல்வதென்றால், தான் பெறும் தொகைக்கு வருமான வரித் துறையிடமிருந்து மனைவி எந்த நோட்டீசையும் (Income Tax Notice) பெற மாட்டார். ஆனால், மனைவி தான் பெறும் பணத்தை மீண்டும் மீண்டும் எங்காவது முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்றால், அந்த வருமானத்துக்கு வரி (Tax) கட்ட வேண்டும்.


கூடுதல் தகவல்


வருமான வரி செலுத்தும் நபர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் இந்நாட்களில் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். புறக்கணிக்கப்பட்டால் உங்களை சட்டப்பூர்வ வலையில் சிக்க வைக்கும் சில உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கவனத்தில் கொள்கிறது. வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடிகளைத் தடுக்க, வரி அதிகாரிகள் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர். வங்கிகள், மியூசுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தரகு நிறுவனங்கள் மற்றும் சொத்துப் பதிவாளர்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் ஆகியவை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வரித் துறைக்கு பணப் பரிவர்த்தனைகளைப் பற்றி புகாரளிக்க வேண்டிய கடமை உள்ளது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, உடனே படிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ